உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவமும் வாழ்வியலும்

21

தம் பெண்டு, தம் பிள்ளை, தம் குடும்பம் என்றே தட்டழிந்து கெட்டவர்கள் எத்துணையர்? 'ஏழு வழி முறையர் இருந்து கொண்டு உண்ணலாம்' எனத் திரட்டி வைத்துத், தலையை உருட்டி விட்டவர் எத்துணைப் பேர்? இவர்களெல்லாம் புகழுடம்பு பெற்றனரோ? கொடை வாழ்வில் குலுங்கினரோ? இலரே!

-

'வாழ்வாவது மாயம்; மண்ணாவது திண்ணம்' என்று சொல்லிக் கொண்டு தேடிய தேட்டையெல்லாம் - அறத்திற் கென அயலார் வைத்த தேட்டையெல்லாம் ஆருக்கும் பயன்படுத்தாமல் அழிந்தொழிவார் துறவொரு துறவோ? தந்நலந்துறந்து பிறர்க்குதவலன்றோ துறவு?

வருவாய்க் கணக்கை ஏமாற்றுவதற்கு அறத்தின் பெயரால் குடும்பவளத்தை நிலைப்படுத்துதற்கு அரசு வளத்தைத் தம்வளமாக்கிக் கோடற்கு என் உள்நோக்கு எதுவாக இருந்தாலும் அந்நோக்கின் ஊடே ஒரு சிறு பொது நலமேனும் ஊடாடி இருக்கச் சிலர் சிலர் நாட்டு நலச் செயல் செய்கின்றனர் அல்லரோ!

இந்நலச் செயல் செய்தற்கும் எல்லாச் செல்வருக்கும் இயன்றதோ? ஏன் இயலவில்லை.

கொள்ளை

கொள்ளைச்

கொள்ளையடித்தலால், செல்வம் குவித்தவராய், உழைப்பாளர் ஊட்டத்தையெல்லாம் அட்டையென உறிஞ்சிக் கொழுத்தவராய், கொலைக்கு அஞ்சாத கொடு வெறியராய், தக்காரென இருந்தும் தகவின்மை வடிவாகித் தாழ்பவராய் இருப்பார் எத்துணைப்பேரை எண்ணி எண்ணி, கைவிட்டு எண்ணுகிறோம்! இவர்கள் செல்வச் செழுமை புகழ்வாழ்வுக்கு வாலாயிற்றா? இகழ்வுக்கு வழியாயிற்றா?

-

பணம் செல்வம் - கொடையாளர்க்கு வேண்டத்தக்கதே. ஆனால் அப்பணமோ செல்வமோ கொடையாகி விட்டதா! அஸதொரு வாய்ப்பு! அவ்வளவே! கொடையாவது உள்ளத்தில் ஊற்றெடுத்துச் சுரப்பது! உருக்கத்தின் பெருக்கமாய்த் திகழ்வது! உணர்வு உந்துதலால் உலாக் கொள்வது! அதனால் தான் வாழ்வியல் உண்மை உணர்ந்த வள்ளுவப் பெருந்தகை,

உள்ளம் இலாதார் எய்தார் உலகத்து

வள்ளியம் என்னும் செருக்கு.

என்றார்.