உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. ஊக்கம் உடையார்

முன்னவர் தேடியிருந்த முழுச் சொத்தும் போய்விட்டது; பின்னவர்கள் மேல் பெருங்கடன் வைத்துச் சென்று விட்டார் தந்தையார். தலை பிதுங்கும் இந்நிலையிலும் நிமிர்ந்து நின்று வெற்றி கண்டவர்கள் இலரா? அவர்கள் எவ்வாறு வெற்றி கண்டனர். தொடங்கிய தொழிலால் இருந்த முதலெல்லாம் ஒழிந்தது.வாங்கி கடன்களும் வட்டியுமே வைப்புப் பொருள்கள்! வருங்காலம் இருள் -மண்டிக் கிடக்கும் கிடப்பு! என்னும் நிலையிலும் அலைவு குலைவு இன்றித் தலை தூக்கி நின்று தழைத்தவர்கள் இலரா? அவர்கள் எவ்வாறு தழைத்தனர்?

நம்பிச்சேர்ந்த கூட்டாளி! நடுச்செங்கலைப் பறித்தது போல் பறித்துத் தலை தடவி விட்டான்! உள்ளது உரியது எல்லாம் நொடிப் பொழுதில் கையலக், கையகல வீடும் மனையும் ல்லாது வெளியேறியும் வெம்பிப் போகாமல் வீறு காட்டிய வர்கள் இலரா? எவ்வாறு வீறு காட்டினர்?

எல்லாம் முழுகிப் போய்விட்டது! இருப்பதைக் கடன் மேனிக்கு எடுத்துக் கொள்ள, ஏதிலியாய் எழுதித் தந்துவிட்டுத் தலை மறைவானர்களும், தாளூன்றி நின்று தனிச் சிறப்பு அடைந்ததிலரா? எவ்வாறு அடைந்தனர்?

ஓ ஓ! என்ன உயர் பதவி! எதற்கும் எடுபிடிகள்! எங்கும் ஊர்திகள்! எண்ணும் வகையெல்லாம் இயலும் அதிகாரம்! பளிச்சிட்ட பேறுகள்! எல்லாமும் நொடியில் பறிபோய் மலை சாய்ந்து நிலை தாழ்ந்ததென்னும் நிலையிலும், நெஞ்சு நிமிர்ந்து நின்றவர்கள் இலரா? எவ்வாறு நிமிர்ந்து நின்றனர்?

தேட்டாளன் அவன்; இன்று ஒட்டாளன் என்னுமளவில் கொள்ளை கொடுத்து விட்டான்; கொத்தாகப் பறிக்கப்பட்டது போல் குடும்பத்தையெல்லாம் கொலைக்குக் கொடுத்து விட்டான்! கட்டிய துணியோடும் முட்டிய கண்ணீரோடும் ஊர்விட்டுப் போன அவன் உயரவில்லையா? எவ்வாறு உயர்ந்தான்?