உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

இளங்குமரனார் தமிழ்வளம் - 40

பள்ளிக்குப் போகும் காலத்தில் படிக்காமல் பாழாக்கி, தொழிலுக்குச் சென்ற நாளிலெல்லாம் வெட்டியாக ஊர்சுற்றி, ‘உதவாக்கரை' என்னும் ஊர்ப்பழிக்கு ஆட்பட்டவர்கள் கூட ஓ ஓ! எனப்புகழ ஒருநாள் வாழவில்லையா? எவ்வாறு வாழ்ந்தனர்?

இனி அவ்வளவுதான்! விழுந்தது விழுந்ததுதான்! எழுந்து நடக்க முடியாது! குட்டிச்சுவர் நிமிர்ந்தாலும் நிமிரும்; இவன் நிமிரான் என ஒத்த கருத்ாக ஊர் தந்த உரிமைப் பட்டயத்தை, ஊரே திருப்பிக் கொள்ளச் செய்துவிட்டுக் கொடி கட்டிப் பறந்தவர் இலரா? எவ்வாறு கொடிகட்டிப் பறந்தனர்?

முட்டாள் மூலை இது! அங்கே போய் உட்கார்! முதற்பலகை என்ன உனக்கு! வகுப்புக்கு மூன்றாண்டு என்பது உன் உரிமை! எப்படி உருப்படுவாய் என அறிவுக்கொடைஞரால் அடையாளம் சொல்லப்பட்டவனும் அவர் மூக்கிலே விரலைவைத்து நோக்க, பள்ளி முதன்மையென்ன, மாநில முதன்மையே பெற்றுவிடுவதில்லையா? எப்படிப் பெற்றான்?

சப்பாணி, நடையைப்பார்! நீயும் உன் காலும்! உனக்கு ஓட்டப் பந்தயத்திலே வேறு ஆர்வமா? என எள்ளி இகழப்பட்ட அவன் ஆருக்கும் முதல்வனாக வருபவனுக்கு முதல்வனாக வந்து, ஆளாளுக்குப் பாராட்ட வென்றதில்லையா? எப்படி வென்றான்?

வாய்த் திக்கல்! வருகிறது மேடைக்கு! ஒரே அறுவை! என்று அவை யோரால் அருவறுப்பாகப் பார்க்கப்பட்டவனும் 'சொல்லின் செல்வன்' 'நாவீறன்' செஞ்சொன்மாமணி எனத் திசைதோறும் இசை பரப்பக் கேட்டதில்லையா? எதனால் இசை பரப்பாளனானான்?

உன்னைப் போலும் முழுமகனுக்கு (மூடனுக்கு)ப் பாடம் கற்பிப்பதில்லை என்று கைவிரிக்கப்பட்டவர்களும் கைவிரித் தவர்களாலேயே கட்டித்தழுவிப் பாராட்டுமாறு புலமைப் பேறு எய்தினர் இலரா? எதனால் எய்தினர்?

உடன் வந்தவர்களெல்லாம் ஓடி ஒளிந்துவிட இனி அவன் தப்பமாட்டான் என எண்ணப்பட்டவனும் ஒருதானாக நின்று ஒரு படையையே புறங்கண்டு வெற்றிவீரனாக நடைபோட்டு வந்ததில்லையா? எப்படி அவனுக்கு வாய்த்தது?