உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. இனநலப் பேறு

என் பிள்ளை நான் கிழித்த கோட்டைத் தாண்ட மாட்டான்; இப்பொழுது ஏதாவது சொன்னால் என்னையே நார்நாராகக் கிழிக்கிறான்'

என் பிள்ளை எவ்வளவு தங்கமான பிள்ளை' சேரக் கூடாவனுடன் சேர்ந்தான்; சீர்கெட்டான்’

'வாய் அலுங்கப் பேசிக் கேட்டதில்லை; அந்த வாயா டியோட சேர்ந்தாள்! இப்பொழுது அப்பப்பா! எப்படி யெல்லாம் எடுத்தெறிந்து பேசுகிறாள்!'

'போன ஆண்டிலே அவன்தான் பள்ளியில் முதல்வன்; இந்த ஆண்டு அவன்தான் ஆகக் கடைசி; அந்த அரட்டைகள் தாம் உறவு; உருப்படுமா?'

'அடுத்த வீட்டில் தண்ணீர் குடிக்கமாட்டான்; கை நனைக்க மாட்டான்; அவனைப் பாரேன்; குடித்துவிட்டுக் கும்பலோடு கும்மாளம் போவதை!

'எத்தகைய நல்ல தாய்; எத்தகைய நல்ல தந்தை; ஆகாத கூட்டத்தோடு சேர்ந்து கையுங்களவுமாகப் பிடிபட்டிருக்கிறான்; சூதாடிய கை, களவாட வெட்கப்படுமா? சே! சே!

கல்லாக இருந்த உடல்! எப்படித்தான் இப்படி இளைத்ததோ? பாவிப்பயல் செய்கிற பாட்டைப் பார்த்து மனந் தாங்காமல் மானந்தாங்காமல் போயே போய்விட்டார்' இத்தகைய பேச்சுகள் எந்தத் தெருவில் இல்லை! எந்த ஊரில்

ல்லை?

உயர்ந்த குடும்பத்தில் பிறந்து, உயர்ந்த ஒழுக்கத்தில் வளர்ந்து, உயர்ந்த நடைமுறையிலேயே பழகியவர்களும் கூட சேர்க்கையால் எப்படியெல்லாம் மாறிவிடுகிறார்கள்?

மலைமேல் விளக்காக மதிக்கப்பட்டவர்களும் தலைகீழ்

மாறி நிலை சாய்ந்துவிடக் காண்கிறோமே!