உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

வள்ளுவமும் வாழ்வியலும்

27

சேர்ந்த இனத்திற்கு எவ்வளவு வலிமை? குழந்தை பருவத் தர்க்கும் வளரும் பருவத்தர்க்கும் தாம் இந்நிலைமையா? வளர்ந்தவர்களுக்கும் பெரியவர்களுக்கும் இல்லையா?

அசையாத உள்ளத்தையும் அசைக்க வல்லவர்களையும், ஆடாத உள்ளத்தையும் ஆட்ட வல்லவர்களையும் உலகம் என்ன அறியாதா? அரிதாக வேண்டுமானால் அங்கொருவரும் இங்கொரு வருமாய் அசையா மலையாம் நிலையரைக் காணலாம்! அம் மலைகளைக் கணக்கில் கொண்டு, அசையும் இலையும், ஆடும் கொடியும் உறுதிமிக்கதாகக் கணக்கிட்டுக் கொள்ளலாமா?

புளிய மரத்தையே வேரோடு பிடுங்கி எறியும் வெங்கொடுஞ் சூறைக் காற்றைக், காயைப் பறித்தாலே கிளையொடியும் முருங்கைதானா முட்டுக் கொடுத்து நிறுத்தும்?

சேர்ந்தவர்கள் கூட்டத்தால் குழந்தைகள் சீர்கெட்டன என்பவர்கள், கூடிய கூட்டுறவால் இளையவர்கள் கெட்டனர் என்பவர்கள் - ஆம் முதியவர்கள் - வளர்ந்த பெரியவர்கள் - தாம் சேர்ந்த சேர்க்கையால், சூதராய் - குடியராய் - வஞ்சராய் - நஞ்சராய் திருடராய் கொலையராய்த் தட்டழிவதும் கெட்டழிவதும் நாளும் நாளும் நாமறியாதவையா?

-

-

-

ஆழமறியாத வெள்ளத்தில் ஆளை விழுங்கும் சுழியில் - அகப்பட்ட இளமையென்ன, உறுதியற்ற முதுமையென்ன? மீள முடியுமா?மீட்டுவதும்தான் பின்னர் எளிமையா? பழுத்து முதிர்ந்த பட்டறிவுப் பாட்டார் வள்ளுவர், பரிவுடன் உலகோரைப் பார்க்கிறார் - உரைத்தே ஆகவேண்டும் என்று பார்க்கிறார்!

>

'தன்னைத்தான் காக்கின் சினங்காக்க' என்ற அவர் 'தன்னைத்தான் காக்கின் இனங்காக்க என்று சொல்லத் தவிக்கிறார்! தன்னை என்ன தன்னை?

சான்றோர் என்று சொல்கிறோமே அவரை விலக்கி விடலாமா? கூடாது; அவரையும் சேர்க்கத்தான் வேண்டும்; அவரும் சேரா இனத்தோடு இரண்டறச் சேர்ந்து விட்டால் தப்பி மீளார்; ஆதலின் அவர் 'தம்மையும்’ விடக்கூடாது என முடிவு செய்கிறார். அதனால்,

‘மனநலம் நன்குடையர் ஆயினும் சான்றோர்க்(கு) இனநலம் ஏமாப்(பு) உடைத்து’