உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

இளங்குமரனார் தமிழ்வளம் - 40

என்கிறார். ஏமாப்பாவது பாதுகாப்பு. மனநலச் சான்றோர்க்கே இன நலப் பாதுகாப்பு வேண்டுமென்றால் இளையர்க்கும், ன வளர்வோர்க்கும் எத்துணை இன நலப் பாதுகாப்பு வேண்டும்?

தனை

மன நலம் நன்குடைய பெற்றோரும் அரசும் இத எண்ணத் தவறினால், பின்னர்க் கலங்கியோ, கண்ணீர் வடித்தோ ஆவதென்ன? அன்றன்றே விளைவைக் காணும் பெற்றோரே அக்கறை காட்டாவிட்டால் ‘ஐந்தாண்டுக்கு ஒருமுறை சந்திக்கும் அரசுக்குத்தானா அக்கறை வந்துவிடும். வள்ளுவர் எவ்வளவு பெரியவர்! வளமார்ந்த வானகத்தை வையகத்தில் படைக்க நினைத்த பெரியவர்! இன நலம் வாய்ந்த மனநலச் சான்றோர் பெருகிய உலகு தானே பேரின்ப உலகம்! எத்தகைய இன்ப உலகப்படைப்பாளி வள்ளுவர்! ஆம் அவர் மிகப் பெரியவர்!