உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

இளங்குமரனார் தமிழ்வளம் - 40

தன் மக்களுள் உடற்குறை இல்லார்மேல் இருக்கும் அன்பினும், அக்குறையாரிடமே பேரன்பு செலுத்துதல் தாயின் தனியியற்கை.

-

அவ்வாறாகவும் தன்மகன் வறுமை கண்டு அயலான் போலத் தாயுள்ளம் ஈன்ற தாயுள்ளம் கருதுமா எனத் திகைக் கிறோம். ஆனால் ஆழ்ந்து அகன்று நுணுகிப் பார்த்து அல்லவோ திருவள்ளுவர் கூறுகின்றார்!

தாய் தன் மக்கள் வறுமை கண்டு வெறுக்கமாட்டாள். உண்மை. ஆனால் அம்மக்கள் வறுமையுற்ற வகை எவ்வகை என்பதை எண்ணிப் பார்த்தே வெறுப்பாள்! வெறாதும் இருப்பாள்!

நேரிய ஒருவன் அடையும் வறுமை, அவனை அறிவார் நெஞ்சை எல்லாம் நெகிழச் செய்வது இல்லையா?

பிறர்க்கென வாழும் பெருந்தகையாளன் படும் வறுமை பிறர் எல்லாம் தாம்பட்டதென வதங்க வைப்பதில்லையா?

ஆனால், முன்னவர் செல்வம் - பின்னவர்க்குரிய செல்வம் என்று பாராமல் சூதிலே அழிப்பானை - குடிகெடுப்பானைத் தாயுள்ளம் பொறுப்பதில்லை. அவன் வறுமையை முறையான வறுமையெனத் தாயுள்ளம் ஏற்பதில்லை!

-

குடி கெடுக்கும் குடியையே கொண்டும் அது குடியைக் கெடுத்தே தீரும் என்பதை அறிந்துகொண்டும் அதனையே வாழ்வாகக் கொண்டு நடைப்பிணமாய்த் திரிவானைத் தாய் மதிப்பது இல்லை. அவன் வறுமையைப் பொருட்டாக எண்ணு வதில்லை.

யனை

-

'கொள்ளிவாய்ப் பேய்' என ஊரெல்லாம் குலைநடுங்கச் செய்கின்ற வஞ்சனை - நஞ்சனை - கொடியனை - கொள்ளை கொலையனை பெற்ற பெரும்பாவத்திற்குத் தன்னைத் தானே நொந்துகொள்வதையன்றி அவனை உயிருடையவனாக எண்ணுவது இல்லை தாயுள்ளம். அவன் வறுமைப்பட்டால் அவ்வறுமைக்காக இரங்குவதுமில்லை.

ஏன்? அவன் செயல்கள் அறஞ்சாராச் செயல்கள்! அவன் பட்ட வறுமை அறஞ்சாராச் செய்கைவழிகளால் வந்த வறுமை!

“அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும்

பிறன்போல நோக்கப் படும்”