உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவமும் வாழ்வியலும்

31

என்பது குறள். நல்குரவை (வறுமையை) இருபால் படுத்திப் பார்க்கிறது வள்ளுவர் உள்ளம்.

அறஞ்சார்ந்த நல்குரவு ஒன்று. மற்றொன்று அறஞ்சாரா நல்குரவு. நல்குரவே (வறுமையே) இல்லை. அது நல்கு உரவே! (கொடுக்கப்பட்ட வலிமைப்பேறே)

அறஞ்சாரா நல்குரவாம் மற்றொன்றே பெற்றவளாலும் பகையாய்க் கருதவும், பழியாய்க் கருதவும்படும்.

பிறரால், பிறர்போல நோக்கப்படுதலில் புதுமையில்லை. பெற்றவளாலும் பிறன்போல நோக்க நேர்கின்ற அறனில்லா வறுமையைத் தேடுகின்றானே பேதை, அவனே பேதையுள் பேதை! தாயின் தூய உள்ளத்திலும் தன்னிருப்பைத் தேடிக் கொள்ளாத கயவனை உலகம் பொருட்டாகக் கொள்ளுமா! இத்தகைய கயமைப் பிறப்பாளர் அவர் இவர் என்று சுட்டிக் கூறலாமா? அவரவர் பக்கத்திலே பார்த்தாலே நன்கு புலப்படுமே!