உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவமும் வாழ்வியலும்

33

வாழ்க்கைத்துணை, சொற்றுணை இல்லையா? வழித் துணை இல்லையா? இவற்றின் துணையாவதுடன், மனத்துணை யாவதும் வாழ்க்கைத் துணையே!

உள்ளத்தை உள்ளபடி உரைத்தாலும், எள்ளல் இல்லாமல், இகழ்வு இல்லாமல் எடுத்துக் கொள்ளும் ஒருமைத்துணை - உயிர்த்துணை அவ்வாழ்வுத் துணையே!

இன்பத்துணை மட்டுமா அது? துன்பத்து விடாத தூய துணை! அத்துணைக்கு ஒப்பு உண்டா? ஓரளவால் உண்டு! அது உயிர் நட்பாம் துணை. ஒரே ஒரு வேற்றுமை! பால் வேற்றுமையுடையது வாழ்க்கைத் துணை! பால் ஒற்றுமை யுடையது. நட்புத்துணை! பால்-ஒருமை நட்பாகாதோ? நட்பாகலாம்! நட்பாகத் திகழலாம்! ஆனால், பொதுப் பார்வையில் வாழ்க்கைத் துணையாய் அதன் சார்பாய்ப் பார்ப்பதே வழக்காகி விட்டதால் இவ்வரையறை வேண்டத்தக்க தாயிற்றாம்.

-

காதலும் நட்பும் ஒத்த தன்மை என்றால் அந்நட்பின் சிறப்பைச் சொல்லவும் வேண்டுமா? ஆனால் அந்நட்பு, நட்புத் தானா? நட்பாக இல்லா நட்பானால், நட்டாற்று வெள்ளத்தில் நடுக்கும் பாறைகளுக்கு இடையே அடித்துச் செல்லப்படுபவன் துடித்துச் சாவ ஆவது போல் ஆகிவிடும் அல்லவா?

வள்ளுவர், நட்பை எத்துணையளவில் எண்ணுகிறார்? நட்பு, நட்பாராய்தல், பழைமை, தீ நட்பு, கூடாநட்பு என ஐந்து அதிகாரங்கள் நட்புக்கு! இம்மட்டோ?

சிற்றினம் சேராமை, பெரியாரைத் துணைக்கோடல்! இவ்வதிகாரங்கள் நீங்கிய அதிகாரங்களிலும் நட்பைப் பற்றி எத்தனை செய்திகள்? ஏன்?

ஆக்கமும் அழிவும் நம்பிய நட்பால் ஏற்படுவதால் தான்!

நட்பாக இருந்த நாளை - நிலையை - நினைத்துப் பார்த்தல் அந்நட்பு பகையாக மாறிய நிலையை நினைத்துப் பார்த்தல் - ஒரு கால் அப்பகையாகிய நட்பு, மீளவும் நட்பாக வந்தால் அந்நிலைமையை நினைத்துப் பார்த்தல் ஆகிய 'முந்நிலை'களை எண்ணுவான், 'முன்னிலை'யாக அந்நட்பைக் கொள்ளலாமா?

கொண்டால் அவன் எதிர்காலம் என்னாம்? அவனை நம்பி வாழ்வார் நிலைமை என்னாம்?