உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. வளரும் பயிர்

மாந்தரின் நாகரிகத்துள் தலையாய ஒன்று உடை. உடுப்பதால் 'உடுப்பு' என்றும் 'உடை' என்றும் பெயர் பெற்றது.

உடுத்துதல் என்பது சூழக் கட்டுதலாகும். “நீராரும் கடல் உடுத்த நிலமடந்தை” என்னும் தமிழ் வாழ்த்து இதனைக் தெளிவாக்கும்.

விண்மீனின் பெயராகிய ‘உடு' என்பது சூழ இருத்தலால் அமைந்த பெயரே!

'உடை' மானத்தின் அடையாளமாக விளங்குகின்றது. உயிரை விடுவதை உறுதியாகக் கொண்டவரும், உடை நெகிழ்தலும் கூடாது எனப் போற்றுதலை அவர் கட்டியுள்ள இறுகுடையே தெரிவிக்கும்.

உடையை விடாமல் காப்பது போலக் காக்கப்படுவது 'உடைமை'. உடைபோல் விடாமல் காக்கப்படுவதால் அமைந்தது உடைமையாகும். இத்தகைய உடைமைகள் ‘பத்து' வள்ளுவர் வழங்கும் அதிகாரத் தலைப்பில் உள.

அவை அடக்கமுடைமை, அருளுடைமை, அறிவுடைமை, அன்புடைமை, ஆள்வினையுடைமை, ஊக்கமுடைமை, ஒழுக்க முடைமை, நாணுடைமை, பண்புடைமை, பொறையுடைமை என்பன.

இவ்வாறு அதிகாரத் தலைப்பில் வாராமல் 'உடைமை; எனப்படுவனவும், உடையர்' எனப்படுவனவும் பலப்பலவாம். அவற்றுள் ஒன்று உணர்வுடைமை. உணர்ந்து கொள்ள வேண்டும் என்னும் ஆர்வமுடைமையே உணர்வுடைமையாம். அஃதனைவருக்கும் பொதுவாம் தன்னையன்று. சிறப்பாம். தன்மையாம். அதனால்தான் தொல்காப்பியனார்.

“உணர்ச்சி வாயில் உணர்வோர் வலித்தே”

என்றார்.

பருகுவன் அன்ன ஆர்வத்தனாக - நீர்வேட்கையுடைவன் அல்லது பசித்துக் கிடப்பவன் நீரையும் சோற்றையும் கொள்ளுதற்கு