உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவமும் வாழ்வியலும்

37

என்ன தவி தவிப்பானே அத் தவிப்புடையவனாக, இன்னும் நீருள் மூழ்கிய நீந்தத் தெரியாதவன் வெளியே வருவதற்கு என்ன துடிதுடிப்பானோ அத்துடிப்புடையவனாக, எரிகுடிசைக்குள் அகப்பட்டவன் வெளியேறுவதற்கு என்ன வெதுப்புக் கொள்வானே அவ்வெதுப்புடையவனாக, எவன் இருப்பானோ அத்தகையனாக ஒன்றை அறிந்து கொள்ளத் துடிப்பவனே உணர்வாளன்!

அவ்வுணர்வாளன் உணரத்தக்க கருத்துக்களைத் தேடிப் போயும் கூட உயர்த்துதலே உணர்வாளர் கடமையாம். அவர்தம் அச்செயலே பல்லாயிரவர்க்கு உணர்த்துதலினும், அவ்வொரு வனுக்கு உணர்த்துதல் உயர்ந்த பயன் செய்வதாய் அமையும்.

பெரும்பேராசிரியர் தென்மொழிக் கலைஞர் உவே.சாமிநாதர் தமிழைக் கற்பதைத் தவமாகக் கொண்டார். அங்கும் இங்கும் தேடிப் போய்க் கற்றார். அந்நாளைப் பெரும்பாவலர் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரனார் ஒருவரே அவரை முழுதுணர்த்த வல்லார் என்று கேள்விப்பட்ட அளவால், அவரையே அடைந்து அவர்க்கு அணுக்கராகிக் கற்றார்.

ஆசிரியர்க்கும் தமக்கும் புகழாக்கிக் கொண்டமை அன்றித் தமிழுக்கும் இணையிலாத் தொண்டு செய்தார்! உணர்வது உடையார்க்கு அன்று உணர்த்தப் பெறவில்லை என்றால் பின்விளைவு என்ன நேர்ந்திருக்கும்?

சபாபதி நாவலர் என்பார் மதுரையில் இருந்தார். அவர் புகழ் மதுரை வட்டாரத்தில் பெரிதும் பரவியிருந்தது, மதுரையை அடுத்துளது விளாச்சேரி. அவ்வூரின் புகழுக்கு ஒருவராய் வி.கோ.சூரியநாராயண சாத்திரியார் என்னும் பரிதிமாற் கலைஞர் தோன்றினார்.

சபாபதியார், கலைஞர்க்குக் கற்பன கற்பித்தார். மாணவர் களிடம் நுண்ணறிவு வெளிப்பட்ட ஒவ்வொரு வேளையும் கட்டித் தழுவித் தம் அன்பை, வெளிப்படுத்திப் பாராட்டினார். அதன் பயன் தமிழுக்கு எத்துணை நலம் சேர்ந்தது என்பதைத் தமிழ் வரலாற்றுணர்வுடையோர் நன்கு அறிவர்.

சோழவந்தான் கிண்ணி மங்கலமடம் சிவப்பிரகாச அடிகளிடம் கற்க வந்தவர் ‘கந்தசாமி”, வீட்டைப் பகைத்து வெளியேறிய அவர் ஏட்டைப் பயிலத் தீராக் காதலராக திருத்தலை அறிந்தார். சோழவந்தான் சந்திரசேகரர் என்பார். இந்நாள் கன்னியப்பரின் முற்பாட்டனார்! முப்பொழுதும் தம் வீட்டிலே யுண்டு கொண்டு, எப்பொழுதும் கற்க உதவினார்!