உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

இளங்குமரனார் தமிழ்வளம் - 40

உணவுக்குக் கையேந்தி நிற்கும் நிலையில் இருந்த அவர்க்கு அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறைப் பேராசிரிய நிலை எய்திற்று.

உணர்வாளர் இருந்து கல்வியும் ஊணுடையும் உதவாக் கால் கந்தசாமியார் என ஒருவர் உளராவரோ?

சங்க நூல்களையெல்லாம் கடலுக்குள் போட்டு விட்டாலும் கந்தசாமியாரைக் கொண்டு முற்றாக எழுதிக் கொள்ளலாம் என அவரை உணர்ந்த பேராசிரியர் விபுலானந்த அடிகள் கூறக் கூடுமோ?

மடத்திலே இருந்த இளைஞன்! அவன் பொலிவு! அவன் கல்வி வேட்கை! இவை வயப்படுத்தத் தம்மோடு கூட்டிச் சென்று பன்னீராண்டுகள் பயிற்றி மடத்தின் பெரும் பொறுப்பிலே வைத்ததுடன், கற்பிக்கவல்ல பெரும் பேராசிரியராகவும், வடமொழிப் பெரும் புலவராகவும், மெய்ப்பொருள் மேதை யாகவும் ஆக்கியவர் புலவர் மயிலேறும் பெருமாள்.

அப்பேறு பெற்றவர் சாமிநாத தேசிகர் என்னும் ஈசான தேசிகர். இந்நிகழ்ச்சி நிகழ்ந்த திருமடம் திருவாவடுதுறை!

வினாவ வந்தவர் விவேகானந்தர்; விளக்கங் காட்டியவர் இராமகிருட்டிணர். ஆர்வப்பெருக்காம் விவேகானந்த வெள்ளத் திற்கு அணையாக இராமகிருட்டிணர் இருந்தமையால் எத்தனை அரிய விளைவினை உலகம் கண்டது! கண்டு வருகிறது.

அன்று, உணர்வை உணர்வு கண்டு கொள்ளாமல் ஒதுக்கி யிருந்தால் ஒரு தவப் பெரியாரை - அன்று - இரு தவப் பெரியாரை உலகம் கொண்டிருக்குமா?

நாற்பது கல் நடந்து போய், ஒரு நூல் கேட்டான். அதற்கென எடுத்துக் கொண்ட முயற்சியை நினைந்துருகிய மூதாட்டி நூலைத் தந்தார்.

கூரைக் குடிசையில் வைத்துவிட்டு வேலைக்குப் போய்த் திரும்பிய போது மழையால் நனைந்து நூல் சிதைவுற்றது. வருந்திய இளைஞன் நூலொடு சென்று நிகழ்ந்ததுரைத்தான்.

""

"தோட்டவேலை செய்து கொண்டு எவ்வளவு நூலாயினும் பயிலலாம் உணவுக்கும் இங்கே வாய்ப்பு உண்டு என்றார் மூதாட்டி! ஆர்வப்பிழம்பாகிய அவன் அங்கே கொள்ளை கொள்ளையாய்ப் படித்தான்! அவனே அமெரிக்க நாட்டுத் தலைவன் அண்ணல் ஆபிரகாம்! நூலின் கொடை உலகுக்கோர் அருளாளனைத் தந்த அருட்கொடையாயிற்றே!