உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவமும் வாழ்வியலும்

39

ஓர் உருபாச் சம்பளத் துணைக் கணக்கன் முத்துசாமி. அம்முத்துசாமி மூளைக்கூர்ப்பு இன்னொரு முத்துசாமிக்குப் புலப்பட்டது. அம் முத்துசாமி வட்ட ஆட்சியர். அவர் இம்முத்து சாமிக்குத் தந்த கல்விக்கொடை என்ன செய்தது. சென்னை உயர்முறை மன்றத்துக்குப் பளிக்குச் சிலையாக அச்சிறு கணக்கனைக் பெரு நிலையில் நிறுத்தியது. அவர் சா.தி.முத்துசாமியார்.

"நான் கற்க விரும்புகிறேன்

"நான் கற்பிக்கிறேன்”

"எனக்கு இவ்வளவு தொலை நடந்து வந்து (3கல்) கற்க இயலாது. நான் வேலைக்குச் செல்லாவிட்டால் குடும்பம் பட்டுணியாம்”

"நானே உன் ஓய்வு நேரத்திற்கு ஆங்கு வந்து கற்பிக்கிறேன்.'

வியந்தான் கற்க விரும்பிய ஆர்வலன்! அவன் வியப்பு வெறும் வியப்பாய் இல்லை! சொன்னபடியே நிறைவேறியது. நிறைவேற்றியவர் காந்தியடிகள்! நிகழ்ந்தது ஆப்பிரிக்காவில்!

வள்ளுவர் சொல்கிறார்; "ஒன்றை உணர்ந்து கொள்ள வேண்டும் என்னும் ஆர்வமுடையவர்க்கு அதனை உணர்த்துதல், தானே நன்கு வளரும் பயிருக்கு மழையும் பெய்து வளர்ப்பது போன்றது." என்று.

"உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன் பாத்தியுள் நீர்சொரிந் தற்று"

என்பது குறள்.

-

(1326)

உணர்வதுடையாரைக் கண்டு கொள்ளல், அவர் உணரத் தக்கதை உணர்த்தல் உணர்வாளர் கடமை; உலக நலங்கருதிய கடமை! கற்பித்தலுக்கு மட்டுமா இது! சொற்பொழிவுக்கும் பொருந்துவது தானே! இன்று கட்டாயத் தேவை திசைமாறிச் செல்லும் உணர்வாளரைத் திருத்தத் தேவை, திருக்குறள் நெறி.

உணர்த்த வேண்டியவர்கள் உணர்த்துதலை விடுத்து ஓய்ந்து கிடந்துவிட்டு, ஒதுங்கி விட்டு, 'உலகம் - நாடு - ஊர் -'. இவர் உணரவில்லையே என்றால் எவர் குறை?