உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. பயிர் மேய் வேலி

“கையூட் டொழிப்புக் காவற்படை அதிரடி நடவடிக்கை” “மதுவிலக்குக் காவலர் நான்கு பேர் சிறை”

“கையூட்டுப் பணம் இருபத்தேழாயிரம் பறிமுதல்" “தஞ்சாவூர் ஏப் - 19”

இது ஓர் இதழின் முதற்பக்கச் செய்தி (அதன் தமிழ் நடைவேறு; ஆயின் செய்தி இது.)

கையூட்டு வாங்கியவர் எவர்?

குடி யைக் கெடுக்கும் குடியை ஒழிக்கும் பணிமேற்கொண்ட மது விலக்குக் காவல் துறையினர். எதற்காகக் கையூட்டு வாங்கினர்? குடியைக் கெடுக்கும் குடியை முழுதுரிமையோடு வழங்கு வதற்கு உதவியாக இருப்பதற்கு வாங்கப்பட்ட கையூட்டு!

வாங்கின்ற சம்பளம் மதுவிலக்குக்கு! அச் சம்பளத்தைக் கையெழுத்திட்டுக் கையேந்தி வாங்கியும் அக்கடமை செய்யாமை குற்றம். அதனினும் குற்றம் மதுவிலக்கை விலக்குதற்குக் கையூட்டு பெற்றமை.

இது பாடிகாவலுக்கு இருந்தவன் தன் கடமையைச் செய்யாததுடன் பகைவனுக்குக் கூட்டாளியாய், அவன் தானே புகுந்து படைகளை அழிக்கப்பாதுகாப்புத்தந்த குற்றம் போல்வது!

இவ்வேலைக்குத் தக்கவன் என்று சான்றிதழ் வழங்கி னாரே? அவர் வழங்குதல் என்ன ஆனது?

இவ்வேலைக்குத் தக்கவன் என்று பணிக்குத் தேர்ந்தெடுத் தாரே? அவர் தேர்வு என்ன ஆனது?

66

"இவனைப் பணியில் நிரந்தரப் படுத்தலாம்” என ஆய்ந்து பரிந்துரை வழங்கினாரே? அவர் ஆய்வு என்ன ஆனது?

படிப்படியே பதவியுயர்வு பெறுவதற்குத் தகுதியளித் தனரே, அத்தகுதி என்ன ஆனது?