உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவமும் வாழ்வியலும்

41

கடமையை ஒழுங்காகச் செய்கின்றானா என்பதை மேலாய்வு செய்தலே கடனாகக் கொண்டிருந்தனரே? அவர் கடமை நிலை என்ன ஆனது?

இத்தனை வகைக் கட்டுக்கும் உட்படாமல் கரவான உள்ளத்தைக் கொண்டிருந்து கையூட்டுப் பெற்றதைக் கயமை என்பதா? திறமை என்பதா?

கயமை என அறிந்து கொண்டால் எதிர்காலத்திலேனும் இத்தகையர் தோன்றாமைக்கு, மேல் நடவடிக்கை எடுக்கப்படும்.

திறமை எனத் தெரிந்து கொண்டால் இப்படிச் செய்யாதவன் பிழைக்கத் தெரியாதவன் என்று எண்ணித் தானும் செய்யத் தொடங்கிவிடுவான்! பிறர் செய்யவும் தொடக்கி விடுவான்.

இதனை இன்று நடவடிக்கையில் இறங்கியவர் அன்றே நடவடிக்கையில் இறங்கியிருந்தால் விளைவு இவ்வளவு கொடுமைக்குப் போயிராதே! தொற்றுநோயெனவும் கொள்ளை நோயெனவும் நாடுதழுவிப் பெருகியிராதே!

உழவன் ஒருநாளும் பாராமல் பயிரை விடுவதில்லை! நேற்றுப் பார்த்தோமே என்று நினைத்துப் பாராது இருப்ப தில்லை.

'பயிர் பாராமல் கெட்டது' என்பதை ஒவ்வொரு நொடியும் உணர்ந்து பார்ப்பவன் உழவன்! அவன் பயிரை மேற்போக்காகப் பார்ப்பவன் அல்லன்.

'உள்வேர்ப் பூச்சி முதல் குருத்துப்பூச்சி வரை' ஒன்றும் ஒன்றாமல் என்றும் பார்ப்பான். எப்பொழுது நோய் பற்றும், எப்படிப் பற்றும் என்பதை எவர் கண்டார்? நோய் பற்றாமல் பார்ப்பது மட்டுமா? பயிர் வளங்குன்றாமல் வளர்தற்கு என்ன வேண்டும் என்பதையும் பார்த்துச் செய்வானே! இதனைக் கருத வேண்டாமா? வள்ளுவர் கருதினார். அவர் கருதியதை அரசும் கருதவேண்டுமெனப் பறையறைந்து முழக்கினார்!

66

'எனைவகையால் தேறியக் கண்ணும் வினைவகையால் வேறாகும் மாந்தர் பலர்”

என்றார்.

(514)

எத்தனை வழிகயால் ஆராய்ந்தாலும், தெளிந்தாலும் தாம் செய்யும் செயல் வகையால் வேறுபடும் மாந்தர் பலர் என்றார்.