உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

இளங்குமரனார் தமிழ்வளம் - 40

'மாந்தர் உளர்' என்றார் அல்லர்; 'சிலர்' என்றார் அல்லர்; ‘பலர்' என்றார்.

மேலும் தலைப்புச் செய்தி தொடர்கிறது; சாராயம் காய்ச்சுவதற்குக் காவல் துறையினர் தலையிடாமல் இருப்பதற் காகக் கையூட்டுத் தரப்பட்டது. இது வாரந்தோறும் முறையாக (மாமூலாக)த் தரப்படுவது. ஒந்வொரு ஞாயிறும் பங்கு போட்டுக் கொள்ளப்படுகிறது, எப்படிப் பங்கு?

பதினொன்றரைப்பங்கு! ஒரு பங்கு காவலர்க்கு; ஒன்றரைப்

பங்கு தலைமைக் காவலருக்கு;

மூன்று பங்கு துணை ஆய்வாளருக்கு;

ஆறு பங்கு ஆய்வாளருக்கு!

இன்னும் ஒரு சிறப்பு! மொத்தத் தொகையில் முதலாவதாக 1500 உருபா எடுத்துவைக்கப்படும்.

அது மதுவிலக்குத் துணைக் கண்காணிப்பாளருக்கு!

வள்ளுவர் ‘பலர்' என்றது புரியவருமே! 'இலர்' என்று என்றாகும்? ஊர்ப்பெயர் எவ்வளவு நல்ல பெயர்! ஊர்ப்பெயர் நன்னிலம், நல்ல மாங்குடி! ஊர்ப்பெயர் என்ன செய்யும்? இக்கையூட்டு நல்லமாங்குடி நன்னிலத்திற்கு மட்டுமே உரியதா?

இவ்வூர் கண்டதால் வெளிவந்தது! மற்றை இடங்களும் கண்டால் வெளிவரும்! அவ்வளவே!

து!

உளவுத்துறை, தணிக்கைத்துறை, காவல்துறை ஆகிய வற்றின் விழிப்புறுத்தக் குறள் "எனை வகையால்" என்னும் எனை வகையால்' கொள்ளுமோ அரசு? 'அனைவகையால்' நாடு நலம்பெறும்!