உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. எள்ளாதன செய்தல்

"பொய் கூறுவதை நெய்ச் சோறெனக் கொண்டவன் அவன்! என்னைப் பொய்யன்" என்கிறான்.

66 களவு கிடைக்கவில்லை என்றால் கண்ணுறக்கம் கொள்ளாத அவன், என்னைப் பார்த்துக் 'களவாளி' என்கிறான்."

"இருபத்துநான்கு மணிநேரமும் குடிமயக்கத்தில் இருப்பவன், என்னைப் பார்த்துக் 'குடிகாரன்' என்கிறான்.”

"எட்டுக்கை இல்லையே; இரட்டைக் கையாகிவிட்டதே என்று கையூட்டு வாங்குபவன். ‘நான் கையூட்டு வாங்கினேன்' என்று என்மேல் பழிபோட்டுவிட்டான்."

66

'ஊரே காறித்துப்பும் ஒழுக்கக்கேடன், என்னைப் பார்த்து நீ மட்டும் ஒழுங்கனோ? என்று சிரிக்கிறான்.”

"வேலைவெட்டி இல்லாத தண்டச்சோறு, என்னைப் பார்த்து 'வெட்டிப்பயல்' என்று பழிக்கிறான்.

99

“நான் கஞ்சிக்கு இல்லாமல் அலைகிறேனாம்! யார் எது கொடுப்பார் என்று திரிகிறேனாம்! அந்த வெங்கன், என்னை ஊரூருக்கு இப்படிச் சொல்லித் திரிகிறானாம்...இப்படிப் பலப் பலர் சொல்வது நாம் கேளாத்தா?

நாமே கூடச் சொன்னது இல்லையா? எண்ணிப் பார்த்தால் எத்தனை எத்தனையோ நிகழ்ச்சிகள் நடவடிக்கைகள் உரை யாடல்கள் ஒலி ஒளிக்காட்சிகளாகத் தோன்றும்! இப்பழிப்பில் உண்மை உண்டா? இல்லையா? பழிப்பவர்கள் முழுமுழுப் பொய்யர் திருடர் - குடியர் எனினும் தம் குற்றம் நோக்காமல் பிறரைப் பழிப்பது ஏன்?

ஏன்?

ஏன்?

-

முழுப் பொய்யன், ஓரிரு பொய் கூறுபவரைப் பழிப்பது

முழுத் திருடன், ஒரு சிறு திருடு செய்தவனையும் பழிப்பது