உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

-

இளங்குமரனார் தமிழ்வளம் 40

முழுக் குடியன், ஒரு விருந்துக் குடியனைப் பழிப்பது ஏன்? பழிப்பவனினும், பழிமிக்கவனா இவன்.

பழி இல்லாத அல்லது பழி குறைந்தவனையும் முழுப் பழிகாரன் பழிப்பது ஏன்?

எண்ணிப் பார்க்க வேண்டிய செய்தி இது. பொய், களவு, பொறாமை, வஞ்சம் முதலிய கேடுகள் மாந்தர் தோன்றி வளர்ந்த நாள் முதலே தோன்றி வளர்ந்தனவே. வள்ளுவர் காலத்திலும் இல்லாதன இல்லை.

இவை இருத்தலாலே தான் இவற்றை எண்ணிப் பார்த்துத் தம் கருத்துகளை எடுத்துரைத்தார் வள்ளுவர்.

ஒவ்வொருவரும் செய்யத் தக்கவற்றை எத்தகையதாகச் செய்ய வேண்டும் என்பதை ஒரு குறளின் முச்சீர்களில் அவர் உரைத்தார்.

“எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும்”

என்றார்.

எள்ளாத - இகழாத. எள்ளுதல் என்பது எள்ளளவு எனச் சிறுமையாக நினைத்துப் பேசுதல். நகைப்பதற்குரிய நிலைக் களங்களுள் முதன்மையானது எள்ளல். எள்ளைப் போல் சிறியதாக நினைத்துப் பேசுதல் -நகைத்தல் எள்ளி நகையாட லாகும். பிறர் எள்ளி நகையாடாத - இகழாத - செயல் வேண்டும் என்றார் வள்ளுவர்.

--

எள்ளுவதற்குரிய நிலைமை எப்படி உண்டாகிறது என்பதை அடுத்த நான்கு சீர்களில் உரைத்தார் வள்ளுவர்.

தான் பொய்யன், தான் திருடன் என்பவற்றைத் தெளிவாகத் தெரிந்து கொண்டவன் தான், தன்னினும் - குறைந்த பொய்யன் திருடன் ஆயவரைப் பழிக்கிறான். தான் அறியவில்லை எனினும் பிறர் இட்டுக்கட்டிக் கூறிய பொய் திருடுகளை ஏற்றுக்கொண்டு எள்ளுகிறான். ஏன்?

-

அவன் எவனை இகழ்கிறானோ அவனை ஓர் எடை ஓஎடை போட்டு முன்னரே ஒரு முடிவுக்கு ஒரு மதிப்பு நிலைக்கு வந்திருக்கிறான்.

அவனைப் பற்றிய ஓர் ஓவியத்தை நெஞ்சத் திரையில் வரைந்து வைத்திருக்கிறான். அந்நிலைக்கு மாறாகச் சிறிய குறை