உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவமும் வாழ்வியலும்

45

தோன்றினாலும், அவன் சிறப்பு நிலையையும் சிறுசெய்கை யையும் எண்ணிப்பார்த்துப் பழிக்கின்றான்.

தன்னோடு அவனை எண்ணி மதிப்பிடுவது இல்லை. அவனோடு தான் அவனை எண்ணி மதிப்பிடுகிறான். அதனால் தான் கூசாமல் பழிக்கிறான். இதனைத்தான்.

“தம்மோடு, கொள்ளாத கொள்ளா துலகு'

என்றார் வள்ளுவர்.

99

ஒவ்வொருவருக்கும் உரிய தகுதி என உலகம் கொண்டிருப் பது எதுவோ அதில் குறையும்போது உலகம் பழிக்கிறது. பழிப்பவர் தம்மோடு ஒப்பிட்டுப் பார்த்துப் பழிப்பது இல்லை. பழிக்கப் படுபவரோடு பழியை ஒப்பிட்டுப் பார்த்துப் பழிக் கின்றனர். இதனைத் தெளிவித்துத் தற்சிந்தனைக்கு ஏவுகிறார் வள்ளுவர்.

பழிப்பவரை எண்ணாதே! உன்னையும் உன் தகுதியையும் உன் செயலையுமே எண்ணிப் பார் என்கிறார். அது,

“எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மோடு

கொள்ளாத கொள்ளா துலகு"

என வடிவு கொள்கிறது.