உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. பொருள் போற்றல்

அறிதல் என்னும் வகையில் அவையறிதல், இடனறிதல், ஒப்புரவறிதல், காலம் அறிதல், குறிப்பறிதல் (2), செய்ந்நன்றி யறிதல், வலியறிதல், என எட்டு அதிகாரங்கள் வள்ளுவர் பாடியுள்ளார். இவற்றுள் வலியறிதலில் ஒரு குறள்!

"ஆற்றின் அளவறிந்து ஈக; அதுபொருள் போற்றி வழங்கும் நெறி”

(477)

99

என்பது. பொருளைப் போற்றி அதனை வழங்கும் நெறி யாது? எனின், அதற்கு மறுமொழியாக. “ஆற்றின் அளவறிந்து ஈக என்கிறார்.

அவர் சொல்லும் “ஆற்றின் அளவு” எது?

ஆறு என்பது வழி, ஆற்றின் அளவு என்பது வழியின் அளவு என்னும் பொருளது. எவ்வாற்றின் - எவ்வழியின் அளவு?

தன்னிடத்திலுள்ள பொருளின் அளவு அறிந்து வாழ வேண்டும் அவ்வாறு வாழாதான், வாழ்பவன் போன்று தோன்றி அழிந்து விடுவான்" என்பது வள்ளுவம் (479).

“தன்னிடத்திலுள்ள பொருளின் அளவு ஆராய்ந்து பாராமல் கொடுப்பவனது செல்வத்தின் அளவு, விரைவில் அழிந்துவிடும்" என்பதும் வள்ளுவமே (480)

இவ்விடங்களில் தன்னிடத்திலுள்ள பொருளின் அளவினை அறிந்து கொண்டு செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்து கிறார். இத்தகைய தெளிவுடைய திருவள்ளுவர், "ஆற்றின் அளவறிந்து ஈக”, என்பதற்கு என்ன பொருள் கருதியிருப்பார்?

பொருளைப் போற்றி வழங்குபவன் எவனோ, அவனுக்குரிய ஆற்றின் அளவு அறிந்துதானே ஈதல் வேண்டும்! கேட்பவன் அல்லது பொருள் வாங்க வந்திருப்பவன் எவ்வகைக்குச் செலவிடப் போகிறான் என்பதை அளவிட்டு அதற்குத் தக ஈயவேண்டும் என்பது வள்ளுவர் கருத்தாகுமா?