உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவமும் வாழ்வியலும்

47

ஆற்றின் அளவறிந்து ஈக என்பது எவ்வலியறிதலில் உள்ளதோ, அவ்வலியறிதலிலேயே ஆற்றின் மயக்கத்தை நீக்கும் ஒரு குறளையும் வழங்கியுள்ளார். ஏழு சீர்க் குறளில் எடுத்த செய்தியை விளக்கிக் கூற இடமில்லை எனின், அதனை வேறொரு குறளில் விளக்கிக் கூறுதல் திருக்குறள் முறை. அம்முறை இங்கே போற்றப்படுகிறது. இங்கே குறிக்கும் பொருளுக்குத் தக நான்கு குறள்கள் தொடர்ந்தமையும் (477-480) தொடர்பு முறையும் எண்ணத் தக்கது. ஆற்றின் விளக்கம் வருமாறு.

ஒருவனுக்குச் செல்வம் வரும் வழி, அதனைச் செலவிடும் வழி என இரண்டு வழிகள் உள. இவற்றுள் செல்வம் வரும் வழி ஆகாறு; (ஆகு ஆறு) அதனைச் செலவிடும் வழி போகாறு; (போகு ஆறு).

செல்வம் வரும் வழி சிறுத்திருத்தாலும் அதனால் கெடுதல் இல்லை; செல்வம் செலவிடப்படும் வழி பெருத்துச் செல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பது, தெளிந்து தீர்மானமாக வள்ளுவர் கூறுவது.

66

'ஆகாறு அளவிட்டிது ஆயினும் கேடில்லை போகாறு அகலாக் கடை'

""

என்பது அக்குறள். இட்டிது - சிறிது.

(478)

ஆற்றின் அளவறிந்து ஈக என்பதில் வரும் 'ஆறு' எவ்வாறு என்பதை இக்குறளில் தெளிவாக்குகிறார். அவ் ‘ஆறு’ ஆகாறு போகாறு என்பவை.

தனக்குள்ள ஆகாற்றையும், தனக்குள்ள போகாற்றையும் (வரவையும் செலவையும்) அறிந்து ஒருவன் ஈவானாக. அத்தகைய ஈகையே, பொருளைத் தான் பேணிப் பிறர்க்கு வழங்கும் நெறியாகும் என்கிறார்.

தன் வருவாய்க்குமேல் தனக்காகவோ தன் குடும்பத்துக் காகவோ செலவிடக்கூடாது என்று திட்டப்படுத்திய திருவள்ளுவர் பிறர்க்குக் கொடுக்கும் கொடைக்காகவும் தன் திட்டத்தை மீறுதல் கூடாது என்கிறார்.

தானும் தன் குடும்பமும் கேடின்றி வாழ்ந்தால் தானே பிறர் நலத்திற்குத் தொடர்ந்து உதவியாக வாழ முடியும்? பிறர் நலத்தை நினைத்துத் தன்னை அழித்துக் கொண்டால், அவ் வழிவுடன் பிறர் நலத்திற்கு உதவாமல் தானும் பிறர்க்குச்