உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

-

இளங்குமரனார் தமிழ்வளம் 40

சுமையாகிவிடும் ஒரு நிலை வருதல் தவிர்க்க முடியாததாகி விடுமே - என எண்ணி இக்கருத்தை வெளியிடுகிறார், வாய்மொழிப் புலவர் வள்ளுவர்.

பிறரை எதிர்நோக்காமல் வாழும் வாழ்வும், சமுதாயப் பொதுநலங் கருதிய வாழ்வே! ஏனெனில் சமுதாயத்திற்கு அவ்வாழ்வு பாரமாக இல்லையன்றோ! இனி இதற்கு மேல், தன் பொருணிலைக்குத் தகப் பிறர்க்கு உதவும் வாழ்வு போற்றத்தக்க வாழ்வு! அவ்வாழ்வே தன் பொருளையும் போற்றிக் காலம் காலமாகப் பிறர்க்கு உதவும் வாழ்வாகவும் அமையும்.

தனி மாந்தரால் சமுதாயமும், சமுதாயத்தால் தனி மாந்தரும் நலம் பெறுதற்கும் வழி வழியாக அம்முறை இடரின்றித் தொடர்தற்கும் வள்ளுவப் பேராசிரியன் வகுத்துத் தந்த பொருளியல் புகழ்நெறி ஈதென்க.