உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

-

இளங்குமரனார் தமிழ்வளம் 40 -

இறை என்பது என்ன? இறுத்தல் தங்குதல் - பொருளது. தைத்து முடிப்பும், இணைப்பும் பட்ட பழந்துணியில் பற்றியுள்ள பேன். 'இறைகூர்ந்த பேன்' எனப்படும் (புறம் - 136) இறை கூர்தல், தங்குதல், மன்னவன் உறங்கும் எனினும் அவன் செங்கோல் உறங்காது எங்கும் காவல்புரியும் என்னும் சிறப்புடையது; முறையின் சிறப்பே இறை என்பதிது.

சான்றோர்

முறையிடுதல் என்பதென்ன? 'இதனைக் கேட்டுத் தருக; இவ்விடரை நீக்குக' எனச் அவையிலோ, முறைமன்றிலோ கேட்டலே முறையிடுதலும் முறையீடுமாம்! முறையீட்டுக்கும் இடம் தராத குறைகேடு, இறைமையாகாது!

காது கொடுத்தும் கேட்காதவன், யாது கொடுத்துத் தான் கேட்பானோ? முறையை வழிவழியாக வந்தது; வரவேண்டியது; முறைமையோ? என்னும் வினா ‘வழிமுறை ஒழுங்கோ? எனக் கேட்பதே;

முறைக் காய்ச்சல், முறை வாய்க்கால், முறைப்பாய்ச்சல், முறையே, முறை முறையே என்னும் வழக்குகளை இவண் நினைக. 'முறைகேடன்' ஒழுங்குமுறை அற்றவன் என்பது கொடுங் கோன்மை குறித்த குறள்.

-

நூல்களை ஒழுங்குறுத்தி வைக்கப்பட்டதை 'முறை' எனல் பெருவழக்கு, எழுத்தொழுங்கு அடங்கல் முறை; நூல் ஒழுங்கு திருமுறை, பன்னிரு திருமுறை அது ஓதுதற்குரியார் 'முறை ஓதுவார்', இறை நிலம் கிளைக்கு முன் முறையோதுவேன் எனல் முறையன்று என்னும் குறிப்பினது ஓரவையடக்கப் பாடல். வண் ‘முறை' என்பது பெருநூல்.

தாய் தந்தையரை அம்மா, அப்பா எனல் முறை; உடன் பிறந்தாரை அண்ணன், தம்பி, தமக்கை, தங்கை எனல் முறை; கொடுத்தவரை மாமன், மாமி, அம்மான், அத்தை எனல் முறை. இவ்வாறே பிறர் பிறரும் பிறப்பு வகையாலும், கொள்வினை கொடுப்புவினை வகையாலும் முறை சொல்லப்படுதல் முறைமை!

அம்முறைமை, தன் குடியன்றி தற்சார் குடியொடும் கூடக் கோணா நடைமுறைக்கு இடமாக விளங்குவது சிற்றூர். எம் முறையாளரிடத்து எம்முறையில் நடந்து கொள்ள வேண்டுமோ, அம்முறையாளரிடத்து அம்முறையில் நடந்து கொள்வதே 'முறைமை' எனப்படும்.