உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவமும் வாழ்வியலும்

51

முறை பேணி நடவார், ஊரவரால் இறையும் (சிறிதளவும்) பொறுத்துக் கொள்ளப்படமாட்டார்! ஒழுகுதல் மட்டும் முறையன்று! ஒழுகுதல் சுட்டும் முறைமையே என்பது விளக்கும் சான்று, நம்மவர் வகுத்தமைத்த முறை! அதில் தவறி நடந்தவன் முறைகெட்டவன் என்பது ஒருவர் பழிப்பன்று! ஊர்ப்பழி!

முறைக்கு எதிரிடையாக நடத்தல் - சொல்லல் - முறைப்பு ஆகும். என்ன முறைப்பு முறைக்கிறாய்! அந்த முறைப்பெல்லாம் இங்கே நடவாது என்பது கேட்கும் செய்தியே.

இவ்வளவு முறைகளும் என்ன சொல்கின்றன? ஆள் வோருக்கும் ஆளப்படுவோருக்கும் என்ன சொல்கின்றன? முறையாக ஒன்றைக் கூறு! முறையாகச் செய்! முறையாகக் கூறுவதைக் கேள்! கேட்டு நட என்பனவே. மக்கள் முறையும் அது! இறை முறையும் அது! இம்முறையே செம்முறை! நன்முறை! முறைமுறையாம் நிறைமுறை! ஈராயிரம் ஆண்டானால் என்ன? ஆறி அலந்த பழஞ்சோறுபோல ஆகாச் செய்தியா இது! எதிர்வரும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் இக்கருத்து ஏற்கத் தகாததாகி விடுமா? மன்னவன் அரசன் தானா? மன்னியவர் எல்லாம் மன்னர் தாமே! அரசு மன் ஆயினென்? மக்கன் மன் ஆயினென்?

'முறைசெய்து காப்பாற்று மன்னவன் மக்கட்கு இறையென்று வைக்கப் படும்’