உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. இன்பமும் துன்பமும்

‘பட்டினி என்பதொரு சொல். இது வழுவுடையது. பட்டுணி என்பதே செவ்விய சொல். ஒரு வேளை விட்டு ஒரு வேளையோ, ஒரு நாள் விட்டு ஒரு நாளோ இடைவிட்டு உண்பதே பட்டுE.'

நீரோடி வற்றிய ஆற்று மணலைப் பார்க்க வேண்டும். ஒரு மேடு; அடுத்து ஒரு பள்ளம். அப்படியே ஆற்றோட்டம்! இவண் வயிற்றோட்டமும் ஒரு வேளை உண்டு மேடுபடல்; மற்றொரு வேளை உணவின்றிப் பள்ளமாதல், இதனைப் 'பொழுது மறுத்துண்ணல்' என்பது சங்க நூல் வழக்கு. ஒரு வேளை உண்டு உரு வேளை உண்ணா நிலையே பட்டுணி என்பதை விளக்கும் உவமைக் காட்சி இது!

பட்டுணி கொடுமை தான்? வளர் பயிருக்கு வான் மழையின்றி வாடிக் கிடக்கும் நிலைமை போல்வது தான்! ஆனால் அப் பட்டுணியினும் பெருங்கேடு உண்டு? அக்கேடும் மாந்தர்க்கே உண்டு! ஆடு மாடு, பறவை வண்டு இவற்றுக்கு ல்லை மாந்தர்க்கே உண்டு! ஆறறிவுடைய மாந்தர்க்கே உண்டு!

தேவைக்கு மேல் ஆடு மாடு முதலியன தின்பதில்லை! பசியின்றி உண்பதில்லை! நோயுற்ற போது உண்பதில்லை! ஆனால் கிடைத்தால், அல்லது கிடைக்கச் செய்தாவது தேவையில்லாமலும், கட்டாயம் உண்ணக்கூடாது என்று நிலையிலும் கூட, குப்பை கொட்டுவதுபோல் கொட்டிக் கொட்டி, அதற்கு மருந்தும் விழுங்கிக் கொண்டு, மருந்துக் கேடும், அருந்து கேடும் ஒருங்கே வாட்ட, நாவடக்கம் இல்லாது வாழ்தல் மாந்தப் பிறப்பின் தனிச் சிறப்பே போலும்! விதிவிலக்கை எண்ணிப் பார்த்து, விதியை மறுப்பது சீராகாதே!

'பட்டுணியால் சாகின்றவர் ஒருவர் எனின், கொழுத்த மிகை ஊணால் சாவார் ஒரு நூற்றுவர்.

'போராற் சாவாரினும், பொருந்தா உணவாற் சாவாரே எண்ணற்றோர்.'