உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவமும் வாழ்வியலும்

53

இவற்றை வள்ளுவர் சொன்னாரா? தாயுமானவர் பட்டினத்தார் போலும் துறவர் சொன்னாரா? அழுகுணியார் குதம்பையார் சிவ வாக்கியர் போலும் சித்தர் சொன்னாரா? பசித்திரு, விழித்திரு, தனித்திரு என்ற வள்ளலார் சொன்னாரா? இல்லை! இல்லை! மேலை நாட்டு மருத்துவர் போவிசு என்பார் ‘நன்னலம்' என்னும் (Best of Health) நூலிலே குறித்தார்! ஆம்! கண்டதும் கழியதும் என்பார்களே, அவற்றைத் தின்று கொண்டதும் கொடுத்ததுமாம் தொல்லைகளை ஒவ்வொரு வரும் எண்ணிப் பார்ப்பது அடிப்படைப் பகுத்தறிவில்லையா? ஒருபோதுண்பான் ‘யோகி' இருபோதுன்பான் ‘போகி'.

முப்போதுண்பான் 'ரோகி' - என்று பேரடக்கத்தார் சொல்வதைக் கூட எண்ணவேண்டாம்! 'உண்ட உணவு அற்று விட்டதா. அடுத்த உணவு கொள்' என்னும் வள்ளுவர் பரிந்துரையையாவது கொள்ளக்கூடாதா?

இத்தனை வேளை என்றால் பொதுமைக்கு ஒத்துவராது; இவ்வளவு என்றாலும் பொதுமைக்கு ஒவ்வாது;

இன்ன இன்ன உணவு என்றாலும் பொதுமைக்கு ஒவ்வாது;

தனித்தனி நாடி போலத், தனித்தனி நாடிப்பார்த்து மேற்கொள்ள வேண்டியது உணவு. அதனால் தான் வள்ளுவர் நெடிதுற எண்ணிக் கெடுதலிலாவழியாக ஒன்றே ஒன்றைக் கூறினார்.

மருந்து என்னும் பத்துப் பாட்டிலே மருந்தைக் கூறினாரா வள்ளுவர் 'மருந்தென வேண்டா; ஆம்; வேண்டா!' என்று கூறுவதற்காகவா மருந்து அதிகாரம்?

முதல் ஏழு பாடல்களிலும் உணவு அடிப்படையே மருந்து என்பதைக் காட்டுகிறார் வள்ளுவர். அற்றால் உண்க; அளவறிந்து உண்க; கடைப் பிடித்து உண்க; மாறல்ல உண்க; துவரப் பசிந்து உண்க; தீயளவு அறிந்து உண்க - இவ்வாறு உண்டால் மருந்தென வேண்டா; ஆம்; வேண்டா!

வெந்து கொண்டிருக்கும் சோற்றோடு; விருந்து வந்ததென்று மேலும் அரிசியைப் போட்டு வேக வைப்பதுண்டா? எரிந்து வடித்து இறக்கிய பின்னர்த் தானே, வேறு உலை கூட்டுவர்! இந்த அடிப்படையில் சமையல் கலையைச், சமைத்த உணவு உண்ணுதலில் கொள்ளக் கூடாதா?