உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

இளங்குமரனார் தமிழ்வளம் - 40

பட்டுணி கிடக்கவா சொன்னார் திருவள்ளுவர் - பசித்து உண்ணச் சொன்னார்; வேண்டும் அளவு அறிந்து உண்ணச் சொன்னார்; உடலியலைக் கருதிக் கடைப்பிடித்து உண்ணச் சொன்னார்; மாறுபாடு விளைக்காத உணவைத் தெரிந்து உண்ணச் சொன்னார்! அதன் பயனையும் அருமையாகச் சொன்னார்; 'இப்படி உண்பானுக்கு எய்தாத இன்பம் எதுவும் இல்லை! இப்படி உண்ணானுக்கு எய்தாத துன்பம் இல்லை!' என்றார் அது:

"இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும் கழிபே ரிரையான்கண் நோய்"

பணமாக்கிக் கொள்ள

முடியாத

பண்டமாற்றுக்

காலத்திலேயே வள்ளுவர் இவ்வறிவுரை கூறினார் என்றால் பணமாற்றுக் காலமாம் இக்காலத்திற்கு எவ்வளவு கட்டாயத் தேவை உணவுக் கட்டு! உணவுக் கட்டு தானே, உணர்வுக் கட்டு! உணவுக்கும், உணர்வுக்கும் சொல் நெருக்கம் மட்டும்தானா? பொருள் நெருக்கம் எவ்வளவு மிகுதி?