உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. தம் இல்

அறிவறிந்த தலைவன்; புரிவு தெரிந்த தலைவன்; தன்னை உணர்ந்த தலைவன்; தன் பிறவி நோக்கையும் அறிந்த தலைவன்; தன் பிறவிப்பணி இன்னதெனவும் தெளிந்த தலைவன்.

அவன் நெஞ்சத்தில் நீங்கா இடம் பெற்றாள் ஒரு தலைவி! அவளைப் பன்முறை கண்டான்! அவள் தன் வாழ்க்கைத் துணையாம் தகவுமிக்காள் என்பதையும், தணியாக் காதலால் உணர்ந்தான்! அவளைப் பார்ப்பதில், அவள் சொல்லைக் கேட்பதில், அவளைத் தழுவி இன்புறுதலில், அவள் இயல் செயல் நடைகளில் தோய்தலில் தனிப் பேரின்பம் கொண்டான்.

உயிர் தளிர்க்க வைக்கும் அமுதம் என்பதே, தனக்காகத் தன்னிடத்தே நடைபயின்று வந்ததாக நினைந்தான்! அந்நினைவில் மேலே மேலே இனிமையில் இனிமையாம் எண்ணவோட்டங்கள் கிளர்ந்தன!

இவளை யான் அடைந்து பெறும் இன்பத்திற்கு

ணையுண்டா? உண்டு என்றால் அது எது? அல்லது அவை எவை? வாழ்வின் அடிப்படைத் தேவை 'மனை'! ‘மனை’ இல்லாமல் 'மனைவி' எப்படி ஆவாள்?

மனையில் இருப்பவள், மனையில் இருந்து கடமையாற்று பவள், மனை சிறக்க வாழ்பவள், மனையறம் காப்பவள், மனையறத்தால் வழிவழியாக உலகம் இயங்க வைப்பவள்; மனைவி! அதற்குத் 'தன்மனை' என ஒன்று இருக்க வேண்டும் அன்றோ?

ஒட்டுக்குடி, ஓரக்குடி ஆகுமா? வந்த வீடும், வாடகை வீடும் தகுமா? தனக்கென இல்லம் - எலிவளை போன்றது எனினும் தனி வளை வேண்டும்! அப்படி இல்லில் தான் தன்னுரிமை உண்டு!

கூட்டுக் குடும்பம் வாழ்வுப் பயிற்சிக் களம்; வாழும் களம் தனிக் குடும்பம். தனிக்குடும்பத்திற்கு அடிப்படை தனிமனை! ஆம் ‘தன்’ இல்லம்! தனி இல்லம்!