உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

-

இளங்குமரனார் தமிழ்வளம் 40

தனி இல்லில் இருக்கும் இன்பம், இவளைத் தனிமையில் கண்டு மகிழும் இன்பம்! அந்த உரிமை இன்பமும், இந்தத் தனிமை இன்பமும் ஒத்த இன்பம். ஆனால் இன்பம் அவ்வளவு தானா?

தனி மனையில் இருந்தால் மட்டும் போதாது! தன் உழைப்பால் பொருள் தேட வேண்டும். எவரோ உழைத்த உழைப்பின் பயனை அட்டையென உறிஞ்சி வாழ்வது வாழ்வாகாது.

தான் உண்ணும் உணவின் ஒவ்வொரு பருக்கையும், துகளும், துளியும் தன் உழைப்பால் வந்த பொருளைக் கொண்டு பெற்றதாக இருக்க வேண்டும். அவ்உணவையும் தானும் தன் மனைவியும் உண்டு மகிழ்வதாக இல்லாமல் பசித்து வந்தோர் பசியகற்று மாறு பகுத்துண்ணும் உணவாக இருத்தல் வேண்டும்.

தம் இல்லில் இருந்து, தாம் தேடிய பொருளால் வந்த உணவை, தக்கார்க்குப் பகுத்துத் தந்து உடன் உண்ணும் போது ஏற்படும் இன்பம் எத்தகைய பெருமிதமான பேறான இன்பம்! அத்தகைய இன்பம் ஒன்றே வளைத் தழுவுங்கால் ஏற்படும் இன்பம்.

தலைவியைக் காணலால் அடையும் இன்பம், தனிமனை யில் அதுவும் தன்மனையில் குடியிருக்கும் இன்பம்; அம்மனை யில் தாம் தேடிய பொருளால் வந்த உணவைப் பகுத்துத் தந்து உடனுண்டு மகிழும் இன்பம், தலைவியைத் தழுவி மகிழும் இன்பம்! இச்செய்தியைத் தெரிவிக்கும் இன்பக் குறள்:

“தம்மில் இருந்து தமதுபாத் துண்டற்றால் அம்மா அரிவை முயக்கு”

ஒரு பாலிலே

-

ஒரு பாவிலே -முப்பால் பொருளா? அறத்தால் பொருள் தேடி, அப் பொருளால் இன்புறுதலைப் பால் பகுப்பால் காட்டிய வள்ளுவர். ஒரு பாடலிலேயே வைத்து விடுகிறாரே அப்பொருள்களையெல்லாம்!

தம் இல் இருத்தல் பொருள்;

தமது பாத்து (பகுத்து) உண்ணல், அறம்;

அரிவை முயக்கு (தலைவியைத் தழுவுதல்) இன்பம்! வள்ளுவர் வகுத்துக்காட்டிய இது. வாழ்வியல் இன்பமா? தாழ்வியல் இன்பமா? அறிந்த பொருளை அறியும் பொருளுக்கு உவமை காட்டல் மரபு.