உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவமும் வாழ்வியலும்

57

தலைவன் தம்இல் இருத்தல் அறிந்த இன்பம். தமது பாத்துண்டலும் அறிந்த இன்பம். பெற்றோர், அவரைப் பெற்றோர் வழியே உணர்ந்து கொண்ட இன்பங்கள் இவை.

இப்பொழுது அவன் அறியும் இன்பம், தலைவியைத் தழுவி பெறும் தனி இன்பம்! இவ்வின்பத்தைத் துய்த்த அளவால், தம்மில் இருந்து தமது பாத்துண்ணும் இன்ப நினைவுகள் முந்துகின்றன. ஓரின்பம் மும்மடங்கு ஆகும் இன்ப வளர்ச்சி இது!

இதன் விளைவு என்ன? ‘வரை விடை வைத்துப் பொருள் வயின் பிரிவு' என்பது இலக்கணம். திருமணத்தைச் சிறிது காலத்திற்குத் தள்ளி வைத்து, அக்காலத்திற்குள், தம்இல் இருக்கவும், தமது பாத்துண்ணவும் தக்க பொருளைத் தலைவன் தன் முயற்சியால் தேடிக் கொண்டு வருவான். அவன் பொருளால் அவளை மணந்து அவளொடும் அறம் பேணி இல்லற இன்பம் துய்ப்பான்! இத்துணை வாழ்வியலும் தேங்கிய குறள் இவ் வின்பக்குறள்!