உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவமும் வாழ்வியலும்

59

பொருட் பாவில் நட்புத் திறத்தால் நூல் நயம் சுட்டிய அவர் இன்பத்துப் பால் புணர்ச்சி மகிழ்தலில் பழுத்த அறிவின் முழுத்த அவ் இலக்கணத்தை வைத்தார்.

அறியாச் சுவையை, அறியாப் புதுப் புதுச் சுவையைத் துய்த்தல் இன்புதான். அவ்வாறே அறியா அறிவை, அறிய அறிய அறியாமை காணலும் இன்புதான். அது பால் காதலன் நிலை! து நூல் காதலன் நிலை! அவனும், 'பால் காதலில்' தன்னை மறந்து, அத்துய்ப்பாகவே மாறிவிடுவான். இவனும், நூல் காதலில் தன்னை மறந்து, அவ்வறிவாகவே மாறிவிடுவான்.

66

"அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம் செறிதோறும் சேயிழை மாட்டு"

(1110)

என்பது முதற் பாவலர் வடித்துத் தந்த இன்பக் குறள் தேனமுது!

அறிவு எது? அறிவு வளர்வு எது? அறிவு வளர்வின் அமைவு எது? அவ்வறிவின் பயன் எது? இவற்றுக்கு விடையெல்லாம் து' என்கிறது. இக்குறள்.

என்னை அறிந்திலேன் இத்தனை காலமும்

என்னை அறிந்தபின் ஏதும் அறிந்திலேன்?

“தன்னை அறிந்திடத் தனக்கொரு கேடில்லை

தன்னை அறியாமல் தானே கெடுக்கின்றான்'

99

இவை தமிழ்த் திருமந்திரங்கள்; அறிதோறும் அறியாமை கண்டவர் அல்லரோ திருமூலர்.

வ்

"எவ்வளவு பேரறிவு உங்களுக்கு; எவ்வளவு பட்டறிவு உங்களுக்கு எவ்வளவு சிந்தனை வளம் உங்களுக்கு, வெல்லாவற்றினும் மேலாக உங்களுக்கு அமைந்த உள்ளத் தெளிவும் - உரைத்தெளிவும் எவ்வளவு" எனச் சாக்கிரடீசரைப் பாராட்டினார் ஒருவர்.

தம்கையை மெல்லெனத் தூக்கி, அவரை 'நிறுத்துக' என அமைத்து, மறுமொழி சொன்னார் சாக்கிரடீசர். “எனக்கு என்னென்னவோ தெரியும் எனக் கூறுகிறீர். எனக்கு தெரிந்தது ஒன்றே ஒன்றுதான்! அது எனக்கு எதுவுமே தெரியாது என்பது தான்' என்றார்! - அறிதோறும் அறியாமை கண்டவர் அவர் அல்லரோ!