உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19. எவன் தொண்டன்

"தொண்டு செய்யப் போகிறேன் என்கிறாயே! வேறு வேலை இல்லாமல் தொண்டு செய்யப்போகிறாயா?

அப்படிப்பட்ட வெட்டித் தனம்

இல்லை தொண்டு!

பொருள் திரட்டத் தொண்டன் ஆகின்றாயா?

போ, போ! எத்தனையோ புதுப்புதுத்

துறைகள் எல்லாம் உண்டே!

புகழ்திரட்டும் வேட்கையில்

தொண்டில் புகுகின்றாயா?

போலி நீ! போலிகள் பாராட்டுக்கு

வருபவன் நீ! பொறிகளை

அள்ளிப் போடு, மீன்களைப்

போல் மின்னலிடும் கூட்டம்!

பிறவி நோக்காய்த் தொண்டுக்கு வருகிறாயா?

பேசுவோம் வா!

தொண்டைத் தொழிலும் அலுவலும்

கடமையும் ஆக்க வருகிறாயா?

அவற்றுக்குக் காலமும் உண்டு; இடமும்

உண்டு; கணக்கும் உண்டு.

தொண்டுக்கு அவையெவையும் இல்லை!