உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

இளங்குமரனார் தமிழ்வளம்

தொண்டுக்குப் பயன் நோக்குகிறாயா? தொண்டுக்குப் பயன் நீ பெறுவது

இல்லை! பிறர் பெறும் நலமே பயன்!

எப்பயனும் எதிர்பாராமல் தொண்டில் இறங்கலாமா?

கூடவே கூடாது; பயனிலாப் பணி பதர்ப்பணி; பாழ்ப்பணி! காலக்கேடு! கருத்துக் கேடு!

தொண்டால் உடல்நலம் உளநலம் பொருள் நலம் உலக நலம்

கண்டால் அன்றித் தொண்டாய்

அமையாது அது.

தொண்டனின் தகுதி உனக்குண்டா?

உண்டெனின் தொண்டு செய்ய வா!

தொண்டனாக வருமுன், உன்னை ஆய்ந்து கொண்டாயா?

உனக்கு உடல் நலம் உண்டா?

உள நலம் உண்டா?

பிறர்க்கு உரைக்கும் ஒழுக்க நிலை உண்டா?

உன் தொண்டால், உன் குடும்பத்திற்கு

நலக்கேடு உண்டா?

உன் குடும்பமும் தொண்டுக்கு உதவுமா?

உதவ வேண்டா எனினும்,

ஊறு செய்யா திருக்குமா?

உதவி எதிர்பாரா நிலையிலும் ஊறு தாரா நிலையிலும் இருக்கத்தக்க எல்லாமும்

செய்த நிறைவு உனக்குண்டா?

குடும்பத்தைக் குலையச் செய்து

குடிநலம் வெறுக்க ஆக்கிக்,

கொள்கிறாயா தொண்டு!

-

40