உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவமும் வாழ்வியலும்

63

அத்தொண்டு தொடராதே!

துலங்காதே!

தொண்டின் மூலதனம் - உள்ளம்.

உள்ளம் உடைமை உடைமை!

பொருள் இல்லாமல் தொண்டுசெய்ய

முடியுமா?

“பொருள் உடையவர் எல்லாரும் தொண்டு செய்தாரா? என்பது வினா!

பொருளைப் பொருட்டாக எண்ணாமல் தொண்டைப் பொருட்டாக எண்ணியவரே

தொண்டர் என்பது உலக வரலாறு.

வள்ளலார் வடலூர்க் கால்கோள்

செய்ய வைத்த ஒப்பத் தொகை,

உருபா ஒன்று! ஒன்றே ஒன்று!

அரசை விடுத்த பின்னர்த்தான் தொண்டரானார் புத்தர்

காந்தியார் தொண்டு - கல்வியில்

இல்லை! செல்வத்தில் இல்லை! உருக்கத்தில் தோன்றியது.

“உயிர்தான் உயிர் இரக்கந்தான்

ஒன்றலாது இரண்டில்லை

என்னும் உயர்வினர் கொண்டது தொண்டு!

நெஞ்சத் தொண்டுக்கு என்ன

மூலம் வேண்டும்?

நேயத் தொண்டுக்கு என்ன

வாய்ப்பு வேண்டும்?

சொற்றாண்டுக்கு என்ன சூழல் வேண்டும்?

உடல் தொண்டுக்கு என்ன

உறுபொருள் வேண்டும்?