உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

இளங்குமரனார் தமிழ்வளம் - 40

புன்முறுவல் செய்யவுமா?

பொருள் தேவை?

தண்ணீர் தரவுமா? தாங்காச்

செலவு?

முள்ளையும் கல்லையும் எடுத்து எறியவுமா முயற்சி?

சாலையோரக் கழிவு செய்யாச்

சால்புக்குமா வாய்ப்பு?

விழுந்தாரைத் தூக்க உதவாக் கை உயிர்க்கையா?

துடிப்பார்க்குத் துடியார்

துடிப்பு, உலைத்துருத்திக் துடிப்புத்தானே!

செய்யாமல் இருக்க இயலாது என்னும் செம்மையில் எழுவதே தொண்டு!

நான் எத்துயரும் படுவேன்;

எவரும் துயர்ப்பட விடமாட்டேன்.

நான் எவ்வறுமையும் உறுவேன்;

பிறர் வறுமை தீர்ப்பதே என்

நோக்கும் போக்கும்.

நான் சோர்வு சோம்பல் கொள்ளேன்;

பிறரும் அவ்வாறிருக்கச் சொல்வேன்.

கற்பேன் - பிறர்க்குக் கற்பிக்க! பேசுவேன் - பிறர் நலத்திற்கு!

எழுதுவேன் - பிறர் நலம் காக்க!

என் நலம் பேணுவேன் - பிறர் நலம் பேணற்கு! நான் இரந்தும் பெறுவேன் - பொதுவறம் புரிதற்கு! நான் போரும் புரிவேன் -புன்மையை அகற்றுதற்கு! நான் கோழையல்லன் - கொள்கையாளன் யான்" - என்பவன் தொண்டன்.