உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவமும் வாழ்வியலும்

65

அஞ்சுங் கோழை

ஆகான் தொண்டுக்கு!

ஆலாய்ப் பறப்பவன்

ஆகான் தொண்டுக்கு!

அடக்கம் இல்லான்

ஆகான் தொண்டுக்கு!

ஆறாச் சினத்தன்

ஆகான் தொண்டுக்கு!

குறையே நோக்குவான்

ஆகான் தொண்டுக்கு!

குற்றம் புரிவான்

ஆகான் தொண்டுக்கு!

குற்றம் மறைப்பானும்

ஆகான் தொண்டுக்கு!

குற்றம் பழிப்பவன் தானும்

ஆகான் தொண்டுக்கு!

குணமே ஆக்குவான்

ஆகான் தொண்டுக்கு!

அழுது கொண்டே

உழுபவன் ஆகான் உழவன்!

அவன் தொழில் ஆக்கமும் ஆகாது.

எரிந்து கொண்டே கற்பிப்பன்

ஆசான் ஆகான்

அவன் தொழில் ஆக்கமும் ஆகாது.

இரக்கம் இல்லா மருத்துவன்

மருத்துவன் ஆகான்!

அவன் தொழில் மருத்துவம் ஆகாது.

முனைப்புக் கொள்ளும் அலுவலன் ஆட்சியன்