உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

இளங்குமரனார் தமிழ்வளம் - 40

முறைமை செய்யான்!

அவன் நிலை ஆக்கம் ஆகாது.

பொதுப்பணிப் புரிவில்

குடும்பம் சாதிமை கட்சி

சமயம் பார்ப்பான் சால்பன் ஆகான்.

அவன் பணி ஆக்கக் கேடாம்.

தொண்டே துணையென ஆவோன் தொண்டன்

முதலும் கொண்டே - முழுமையும் தொண்டே!

மூச்சும் தொண்டே - பேச்சும் தொண்டே!

தொண்டர் களத்தில்

துலங்க மாட்டாதவன்

தொண்டுக் களத்தை விடுத்துத் தொலைவில் விலகல்

அவனுக்கும் நலமாம்

தொண்டு தனக்கும் நலமாம்

தொண்டால் எய்தும்

66

தொல்லை எல்லாம்

"கண்டாய் இறைமைக் கொடை” யெனக் கருதிக் கருதிக் கடமை புரிந்து

தொண்டிற்கே ஈகம் புரிவோன் தொண்டன்! அத்தொண்டன் தொண்டே

இறைவழி பாடாம்!

புனித நீரில் நீராடல் தீர்த்தம் இல்லை. வடிகால் கழிவை அகற்றலால் தெறிக்கும் நீரே தீர்த்தம்.

திருக்கோயிலுள் புகுந்து காதைப் பிடித்துத் 'தோப்புக் கரணம் போடுவதில் சிறந்தது