உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவமும் வாழ்வியலும்

திருக்கோயில் சுற்றில் கிடக்கும் குப்பையைக் கூட்டி அள்ளுவது.

கும்பிட்ட கையனாய் நின்று வழிபடலிற் சிறந்தது, ‘உதவி யெனக்

கூப்பிட்ட குரலுக்குக் கை கொடுத்து உதவுவது.

எட்டுக்குடம் பாலைக் கொட்டிக்

குடமுழுக்காட்டுவதிலும் சீரியது சொட்டுப் பாலுக்கு ஏங்கும்

குழந்தைக் வழங்குவது.

கட்டுக் கட்டாய்ச் சூடனும் பத்தியும் கொளுத்துவதைக் காட்டிலும் நல்லது கல்லாதவர்க்குக் கல்வியறிவு வழங்குவது.

இவற்றை நம்பு!

நீ நம்பும் மதமா? நம்பா மதமா?

எனக்குக் கவலையில்லை!

நீ மாந்த நேய நம்பிக்கையாளன் என்பது உறுதி.

நீயே இறைமைத் தொண்டன்!

இறைமையும் விரும்பும் ஈடிலாத் தொண்டன்

67