உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20. பயனெதிர் பாராமையும் பயனே

பாராட்டு வகைகளுள் பெரியது ஒன்று உண்டு. “அது பயன் எதிர் பாராமல் பணி செய்தல்" என்பது. பயன் எதிர் பாராமல் பணி செய்வது தான், பாராட்டும் பணியா? அப்படிச் செய்வார் உளரா? பயனை எதிர்பாராப் பணி, பணியன்று. பதர்ப்பணி!

பயன் இல்லாமல் ஒரு விடிகாலை கழிந்தது. அதனைப் பதடி (பதர்) வைகல் என்று பழித்தார் ஒரு புலவர். அவர்க்குப் 'பதடி வைகலார்' எனப் பாராட்டு எடுத்தார், குறுந்தொகை யைத் தொகையாக்கிய பூரிக்கோ என்பார்.

விழுப்புண்படாத நாளெல்லாம் நாளொடு எண்ணக் கூடாத நாள் என்பது வள்ளுவம்.

இறைவனைப் பேசாத நாளெல்லாம் பிறவாநாள் என்பது பத்திமையார் பாட்டு.

பயன்பாடு வேண்டும்; பயன் கருதாமை பாராட்டுக் உரியது அன்று.

ஒருவன் உலாவுவது உடல் நலம் கருதிய பயன்தானே. ஊண் கொள்வது உயிர் நலம் கருதிய பயன்தானே. ஒருவன் உரையாற்றுவது தற்பயனும் கேட்பார் நற்பயனும் கருதியது தானே!

பயனிலாச் செயல் பதர்ச் செயல்.

பயனிலாச் சொல் பதர்ச் சொல்.

பயனிலா நினைவு பதர் நினைவு.

அரிசி இல்லா நெல், நெல் அன்று. அது பதர் நெல். உள்ளீட்டுப் பயன் இல்லாதது பதர் (பொய்க்கு). அதனாலேயே,

--

-

பதடி பொக்கு

"பயனில்சொல் பாராட்டு வானை மகனெனல் மக்கட் பதடி எனல்" என்றார் திருவள்ளுவர்.