உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவமும் வாழ்வியலும்

69

பயனில்லாத சொல்லைச் சொல்லுவானை மட்டுமின்றி, அச்சொல்லைப் பாராட்டுபவனையும் பதர் என்பது இக்குறள்.

பயன் செயல் செய்வாரை உலகமே உவந்து பாராட்டும் என்பது வள்ளுவம். அது,

“நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்

பண்புபா ராட்டும் உலகு” என்பது.

பயன் கருதியே சொல்ல வேண்டும்; பெரும் பயன் கருதியே சொல்ல வேண்டும்; பயன் கருதாமல் எதனையும் சொல்லுதல் ஆகாது என்பதனாலேயே 'பயனில சொல்லாமை' என்றோர் அதிகாரத்தை (20) வகுத்தார் வள்ளுவர்.

பொறாமை, பிறர்பொருள் விரும்பல், புறங்கூறல் தீவினை செய்தல் என்பவற்றுடன் பயனில கூறலையும் விலக்கத்தக்க வரிசையிலேயே வைத்தார். (அதி 17-21)

“சொல்லுக சொல்லில் பயனுடைய சொல்லற்க சொல்லில் பயனிலாச் சொல்"

(200)

66

“அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்

(198)

பெரும்பயன் இல்லாத சொல்"

என்று கூறியவற்றைக் கருதுக.

விளையாட்டிலும் விளைவு வேண்டும் என்று சொற்கண்டது இந்த மண். மரத்திலும் ‘பயன்மரம்' எனப் பகுத்துக் கண்டது இந்த மண். அறமே இல்வாழ்வுப் பயன் எனத் தெளிந்தது இந்த

மண்.

விளைய வேண்டா என எண்ணிக் கொண்டு எந்த உழவனும் விதை விதைப்பானா? பால் கறக்க வேண்டா என்றா பால் மாடு வாங்குவான்? ஊதியமே வேண்டா என்று எண்ணிக்கொண்டு எந்த வணிகனாவது வாணிகம் செய்வானா? பொழுதில்லை என்று தவிக்கும் வாழ்வில் பொழுது போக்கைக் கருதுவானா ஒருவன்.

ஒவ்வோர் இயக்கமும் பயன் கருதியதே ஆம். பயன் கருதா இயக்கம் பாழ் இயக்கம்.

எறும்பு முட்டை தூக்கிச் செல்கிறதே.

தேனீ பூத்தேடிப் பறக்கின்றதே.