உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

இளங்குமரனார் தமிழ்வளம் - 40

பூனை எலி வேட்டையில் எவ்வளவு ஆர்வம் காட்டுகிறது!

புலியைக்கண்டு புள்ளிமான் என்ன ஓட்டம் ஓடுகிறது. இவ்வுயிரிகள் இயக்கமும் பயன் கருதியவைதாமே!

ஆனால் இவற்றின் இயக்கம் பிறர் நலப்பயன்- அல்லது பிறிது நலப்பயன் கருதியதா?

தற்பயன் தற்சார்புப் பயன் கருதியதே.

ல்லை.

ஆறாம் அறிவாம் மன அறிவு அறிவு அவற்றுக்கு 'அருள்'என்னும் 'பொருள்' ஒன்றை அவை அறியா? ஆகலின் பயன் என்பது அவற்றின் தனி வாழ்வு, சார்பு வாழ்வு அளவிலே கட்டுண்டு நின்று விடுகின்றது.

ஐயுணர்வுக்கு மேம்பட்டதாம் மெய்யுணர்வு பெற்ற மக்கட் பிறவியரும் ஓரறிவு முதல் ஐயறிவுப் பிறப்பின போலத் தற்பயன் தற்சார்புப் பயன் கருதியாக இருந்தால், அம்மக்கட் பிறவியும் இழி பிறவியாகிவிடும் தானே!

வானில் பறக்கும் வாழ்வாளி, மண்ணில் நெளியும் புழுவாக இருப்பின் அப்பிறப்பும் புழுப்பிறப்புத் தானே!

பயன் பார்த்தல் கட்டாயத் தேவை. ஆனால், அப்பயன் தன் நலத்தளவில் தன் சார்பு நலத்தளவில் நில்லாமல் உலகாக உயிர்களாக விரிதல் வேண்டும்.

குடும்ப வாழ்வுப் பயன் 'அறம்' என்பார் வள்ளுவர். விருந்தோம்புதலை வேள்விப்பயன் என்பார்.

வாளா எரியும் நெருப்பில் பயன் பொருளைக் கொட்டிப் பாழாக்காமல், ஆறா எரியாய் எரியும் பசி எரியை ஆற்றுவதற்கு ஊண் வழங்குதலே, 'விருந்தென்னும் வேள்ளிப் பயன்' என்பார். இக்கொள்கையை இயக்கமாக்கி நிலை நாட்டினார்.

பயனைப், படுபயன் (172, 676), ஆபயன் (560), மாண்பயன் (901), மாண்டற்கு அரிதாம் பயன் (177) என்பார் வள்ளுவர்.

பயன் ஆய்தலைப் பயன் தெரிதல் (104), பயன் தூக்கல் (103, 912) என்பார். நற்பயனுக்கு மாறாகிய தீப்பயன் தருவனவும் உண்டு என்பதைச் தீச்சொற்பயன் (128). பல்லார் முனியப் பயனில சொல்லல் (191) என்பார். சொல்லப் பயன்படும் சான்றோரையும், கொல்லப் பயன்படும் கீழையும் குறிப்பார்.