உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவமும் வாழ்வியலும்

71

எல்லா நலனும் அமையினும் வேந்தமைவு இல்லாத நாடு பயன்படாது என்பார் (740).

ஐயுணர்வு எய்தினும் பயனில்லை மெய்யுணர்வு இல்லாத வர்க்கு என்பார் (354). சொல்லாடாமல் இருக்கும் இன்பப் பயனையும் குறிப்பார் (1100). அவையில் சொல்லாடாச் சிறப்பை யும் சுட்டுவார் (403). கல்லார், விளை நிலம் இல்லாக் களர் நிலம் ஒப்பர் என்று பயனின்மைப் பிறவிக்குப் பயனின்மை நிலத்தை ஒப்பாகக் காட்டுவார் (406).

"கற்றதனால் ஆகிய பயன் என்ன?” என வினாவி, ‘வாலறிவன் நற்றாள் தொழ'லைக் கவின் விடையாகக் கூறுவார். 'தாள் தொழல்' என்பது அடிபற்றல், வழியில் நடத்தல். தூய அறிவன் வழியில் நடத்தலே கல்விப்பயன் என்பார் (2)

அறிவன் எவன்? எனின்,

"மூவகைக் காலமும் நெறியின் ஆற்றிய அறிவன்" என்பார் தொல்காப்பியர். அறிவன் என்பார் சித்தர் எனப் பின்னாளில் பெயர் பெற்றனர். மெய்ச்சித்தராவார், தமக்கென வாழாமல் பிறர்க்கென வாழ்ந்த பெருந்தகைப் பிறவியர். உள்ளொளி மிக்காராய் வழிகாட்டும் திறவோராய் வாழ்ந்த அவ்வறிவர் வழியில் பிறர்க்கென வாழ்தலே வாழ்வுப்பயன் எனக் கண்டு கொள்க. இவற்றால், பயன் எதிர்பாராமை என்பது, தனக்கெனப் பயனோ, பிறர்க்கெனப் பயனோ எதிர்பாராமை அல்ல! எவர்க்கும், எவ்வுயிர்க்கும் நற்பயன் உண்டாதலும், எவர்க்கும் எவ்வுயிர்க்கும் தீப்பயன் உண்டாகாமையும் ஆகியவற்றைப் போற்றி வாழ்தலே பயன்பட வாழும் வாழ்வு எனக்கண்டு கொள்ளலாம்.

தற்பயன் கருதா வாழ்வு, பிறர் பயன் கருதா வாழ்வுமாம். தன்னைக் காத்துக் கொள்ளாள் பிறரைக் காத்துக் கொள்ள வல்லான் ஆவனோ?

அதனால்தான் 'தான்' என்றும், தற்காத்து என்றும் தன்னைத் தான் காதலன் ஆதல் என்றும் (43, 56, 209) கூறினார். தன்னைத் தான் காக்கின் என்றும் (305). தாம் இன்புறுவது என்றும் (399) குறித்தார்.

தன்னைப் பேணிக் கொண்டு உலகையும் உலகத்து உயிர் களையும் பேணும் பெருந்தகை வாழ்வே வாழ்வு என்பது வள்ளுவத் திரட்டு. ஆன்ம நேயப் பயனே அரும்பயன் என்பது உலக அருளாளர்களின் ஒட்டு மொத்த முடிபு.