உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21. பற்றறுத்தலும் பற்றே

'பல்' வழியாகத் தோன்றிய ஒரு சொல், பற்று. பூனையும் நாயும் தத்தம் குட்டிகளை எப்படித் தூக்கிச் செல்கின்றன! நாம் காண்பதுதானே அது. பல்லால் கௌவிக்கொண்டு செல்வதைப் பார்த்த கூரிய பார்வையன் அதனைப் படமாக்கிப் 'பற்று' என்றான். பல் + து = பற்று.

பற்று, வரவு கணக்கில் உண்டு; பற்றுமுறி, பற்றுச்சீட்டு கணக்கு வழியவை. பற்றிப் பிடித்தல் தீக்குச்சியிலும், தீ எரியிலும் பற்றி (பத்தி) யிலும் உண்டு.

பற்றிப்பிடித்தல் பற்றுக் கோடு. பற்றிப் பிடிக்கும் கருவி பற்றுக் குறடு. ஈரிரும்புகளை இணைக்கும் பற்றிரும்பு, பற்றாசு, பற்றி நிற்கும் உறவு பற்றாயம்.

எலிப்பொறி, பற்றுபொறி; பற்றாயமுமாம். பற்றற்ற குருவன் துறவன் - பற்றற்றான். பற்றிக் கொள்ளும் தகைமை பற்றுமை; பற்றாட்டு. கலத்தில் பற்றும் அழுக்கு கரி சோறு என்பவை பற்று. அவற்றைத் தேய்த்தல் பற்றுத் தேய்த்தல். பற்றிக் கொள்ளார் பற்றலார் (பகைவர்) பற்றார்.

ஒரு ‘பல்', பற்றிக் கொண்டு வரும் பற்று வழிச்சொற்கள். இவையும் இவை போல்வனவுமாம்.

ஆகும்.

‘பற்றறுத்தல்' என்பது பற்றினைப் பற்றாமல் அகற்றுதல்

முற்றாகப் பற்றறுத்தல் உண்டா?

புத்தர் வரலாறே சான்று; பற்று அறவே (சிறிதும்) கூடாது என்பது அவர் பற்று.

பற்றை விடுதற்கும் பற்றா வேண்டும்?

ஆம்! கட்டாயம் வேண்டும்.

இதனால்தான், 'பற்றுக' என்ற வள்ளுவர், பற்றற்றான் பற்றினை' என்றார். ஏன்? என வினவுவார் தெளிவதற்கு.