உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவமும் வாழ்வியலும்

73

“அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு" என்றார். பற்றை விடவும் பற்று வேண்டும் என்பது வியப்பான இயற்கை நெறி.

பற்று அறுதற்குப் பற்றற்றாரைப் பற்றிக் கொள்ள வேண்டும் எனின், அதுவும் பற்றுத்தானே! அதில் பற்றறுதல் எங்கே இருக்கிறது?

"பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப் பற்றி விடாஅ தவர்க்கு” என்னும் குறளால்,

பற்றற்றாரைத் துயரங்கள் பற்றுவதில்லை என்று கண்ட பின்னரும் பற்றற்றாரைப் பற்ற வேண்டுமா?

பற்றற்ற அளவிலேயே அறியாமை அகன்று விடும்; நிலை பேறானது இது. நிலைபேறு அற்றது இது என்பது புலப்படும் என்பதை,

“பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று

நிலையாமை காணப் படும்.

என்பாரே திருவள்ளுவர்.

பிறப்பு என்பதன் பொருள் 'பிறப்பென்னும் பேதைமை’ என்பதால் அவர் தெளிவிப்பாரே

இத்தகைய மேனிலையாம் துறவர்க்கும் மற்றொரு துறவரைப் பற்றிக் கொள்ளல் வேண்டுவதுதானா?

அறவே பற்று அற்றவர் மக்கட் பிறவியருள் தலைப் பட்டவர்; மயக்க வலைக்குள் சிக்கிக் கொள்ளாத விடுதலை (வீடுபேற்று) மாண்பர். அவர்க்கும் பற்றற்றார் பற்று வேண்டுமா?

ஆள்வோர் இருப்பார்; அவர்க்கும் அறிவர் துணை வேண்டும். அறிவர் எவற்றுக்கும் ஆமாம் ஆமாம் போடும் தந்நலத்தர் அல்லர்;

அவர், 'இடிக்கும் துணையர்’ ஆவர். இடிக்கும் துணையர் இல்லா வேந்து, கொடுப்பார் இன்றியும் கெட்டுப்போகும் என்பதும் (448) இடிக்கும் துணையையுடைய வேந்தைக் கெடுக்கும் தன்மையர் எவரும் இலர் என்பதும் (447) நேர்முறை, எதிர்மறை வள்ளுவங்கள். இடிக்கும் துணையராம் அவர். வந்ததுயர் நீக்கவும் வர இருக்கும் துயரை முன்னரே விலக்கவும் வல்லார் என்பார் (442) இறையாண்மை காக்கவல்ல நிறையாண்மை ஈதெனின், தனியியல் வாழ்வை நனியியல் வாழ்வார்க்கும்