உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

இளங்குமரனார் தமிழ்வளம் - 40 ஓ

நட்பிலும் இந்நெறி போற்றப்பட வேண்டுதலை இயம்புவார்

வள்ளுவர்.

"நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண் மேற்சென் றிடித்தல் பொருட்டு.”

என்னும் நட்புக் குறளைக் காண்க.

(754)

வாழ்வு, அளவியல் உடையது. அளவு அறியாதவை செருக்கு. சினம், அவா அன்னவை. அவற்றைக் கொள்ளும் நட்பை நன்னட்பு ஏற்காது. இடித்துக் கேட்கும்; தட்டிக் கேட்கும்; தடுத்தும் காக்கும். ஆதலால் ‘இடிக்கும் கேளிர்' என. நட்பினை இயம்பும் அகப்பொருள் நூல்கள்.

நட்பாராய்தலில் அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய வல்லார் நட்பை (795)த் தேடிக்கொள்ள வலியுறுத்துவார் வள்ளுவர்.

வேந்துக்கும் நட்புக்கும் இடித்துரைப்பார் வேண்டி யிருத்தல் கூடும். ஆனால், பற்றற்ற துறவர்க்கும் வேண்டியிருக்குமோ என்னும் வினா எழும்பலாம். விடையை வள்ளுவமே வரிந்து கூறுகின்றது.

நிலையில் மாறாத மலை அன்னவர் எனின் என்ன?

குணம் என்னும் குன்றம் ஏறி நின்றவர் எனின் என்ன? பூனைக்கு வரும் சறுக்கல் போல் யானைக்கும் சறுக்கல் ஏற்பட்டு விடுவதில்லையா?

தம் தகவோடு பொருந்தாத செயலைச் செய்வாரும் உளர் என்பதால் தானே, "தம்மோடு -கொள்ளாத கொள்ளாது உலகு" என்று நெறியுரைத்து எள்ளாத எண்ணிச் செயல் வேண்டும் என வலியுறுத்தினார்.

அம்மட்டோ? குன்றின் அனையாரும் குன்றுவர், குன்றுவ குன்றி அனைய செயின் என்றாரே! குன்றியை ஏன் காட்டினார்? குன்றினும் மிகக் குன்றியது குன்றி என்பதற்கோ? ஆம்! அதற்கும் தான்; அதனொடு குன்றியின் சிவப்பென்ன? அதன் முகப்பில் அமைந்த கறுப்பு என்ன? வெளிப்படத் தெரியும் சிவப்பு மறைந்து கிடக்கும் கறுப்பு எனத் தவம் காட்டி, அவம் புரிவார்க்கு விளக்க மாக நிற்கவில்லையா? “மை பொதி விளக்கே என்ன, மனத்தினுள் கறுப்பு வைத்து" என்று முத்தநாதனைக் கூறுவாரே சேக்கிழார்.