உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவமும் வாழ்வியலும்

75

B

போலித்துறவி கூடா ஒழுக்கத்தான் எனின், மனவலிமை - கட்டொழுங்கு - குன்றிய பற்றற்றாரும் இருக்கக்கூடும் தானே! அவர்க்குத் தளர்ச்சிப் போதில் சறுக்கும் வேளையில் ஊன்றுகோலாக இருந்து காப்பார் வேண்டுமே! அவர் மிக வலியராக இருப்பின்தானே பாதுகாப்பாக முடியும்!

மரத்தைப் பற்றிக்கொள்ளும் கொடி, வலுப்பெற்று விடுகிறதே! பருமரத்தை அண்டிய பல்லியும் பிழைக்கும் என்பது பழமொழி ஆயிற்றே. 'பெரியாரைத் துணைக்கோடல்' என்பது திருக்குறள் விளக்கம் ஆயிற்றே.

அலையில் அலைக்கழிவானுக்குக் கட்டுமரம் கைக்கு எட்டுவது எவ்வளவு பேறு!

மரத்தில் இருந்து வீழ்வானைத் தாங்கிக் கொள்ளும் வலியாளன் வாய்ப்பது எத்தகைய வாய்ப்பு!

அவ்வாறே பற்றற்றான் அப்பற்றற்ற தன்மையை உறுதிப் பற்றாகக் கொண்டிருக்க, அவனினும் வலிய பற்றற்றான் வேண்டும் என்பது தெளிந்து தேர்ந்த கட்டளையாம்.

'மனம்' நன்றாக இருத்தல் நன்றே. அதன் மாறா நலத்திற்கு 'இனம்' நன்றாக இருக்கவேண்டும் அல்லவா!

மேம்பட்ட

சான்றோர்க்கு அவரின் சான்றோரும் பண்பாட்டோர்க்கு அவரின் மேம்பட்ட பண்பாட்டோரும் உறவாய் இருக்கும் உயர்வு போலப் பற்றற்றோர்க்குப் பற்றற்றோர் உறவு வேண்டும் என்பது வாழ்வியல் தெளிவாம். ஆதலால் பற்றறுதல் என்பது, பற்றற்றாரைப் பற்றும் பற்றுமையே என்பது விளக்கமாம்.