உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22. பண்பாட்டின் மூலக்கூறும் வளர்ச்சியும்

தமிழர் பண்பாட்டுச் சான்றுகள் எண்ணற்றவை.

66

என் நெஞ்சம் திறப்போர் அங்கு என்னைக் காணார்; உன்னையே காண்பார்" என்கிறார் ஆதனுங்கனைப் பார்த்துக் கள்ளில் ஆத்திரையனார் (புறம். 175)

"யான் வாழும் நாளையும் எடுத்துக்கொண்டு வாழ்க" எனச் சிறு குடிகிழான் பண்ணனை முடிமன்னனாகிய கிள்ளி வளவன் கூறுகிறான்.

"யான் வாழும் நாளும் பண்ணன் வாழிய”

என்பது அவன் வாக்கு. 'பசிப்பிணி மருத்துவன்' என அவனுக்குப் பொருந்தப்பட்டம் வழங்கி, அவன் இல்லம் அணித்தோ சேய்த்தோ எனத் தான் ஒரு பாணனாகப் பாடித் திளைக்கிறான்.

"என் தந்தை போன்றவனின் உள்ளடியில் நோவுமாறு முள்ளும் குத்தாதிருக்க" என்று பிட்டங்கொற்றனைப் புலவர் காரிக்கண்ணனார் பாடுகிறார்.

மனைவியைப் பிரிந்து மற்றொருத்தியோடு வாழ்ந்த குமணனைக் கண்டு. "பசியும் இல்லோம்; பாரமும் இல்லோம், உன்கொடை வேண்டிவந்திலோம்; உன் மனைவி துயர் தீர உடனே பூட்டுக தேர் என்றனர் கபிலர் பரணர், அரிசில்கிழார், பெருங்குன்னூர்கிழார் (புறம் 143 - 146)

"என் பெயர் சோழன்" என்கிறார் பிசிராந்தையார். “என் பெயர் பிசிராந்தை” என்கிறான் சோழன்.

காணாமல் கொண்ட நட்புக்காதலர் இருவரும் எங்கே காண்கின்றனர்? வடக்கிலிருந்து உயிர் துறக்கும் நிலையில் கண்டு ஒன்றாகி நின்றனர். இடம் ஒதுக்கச் சொன்ன வேந்தன் சொல்லும், அவ்விடத்தில் அமர வந்த புலவர் செயலும் கூடி இருந்தவர்களை வியத்தொறும் வியத்தொறும் வியப்பிறந்த பெருமையில் சேர்க்கின்றது.