அந்த உணர்வு எங்கே?
263
அவன் பெருநிலம் முழுதாளும் வேந்தனும் அல்லன்; குறுநிலங் காக்கும் கொற்றவனும் அல்லன்; அல்லன்; சிற்றூர்த் தலைவனே அவன். ஆனால் வேந்தர்களும் விரும்பும் ஏந்து புகழாளனாக இலங்கினான். பொய்யாச் செந்நாவின் புலவர் புகழுக்கு இலக்காகிச் சிறந்தான். பிட்டங் கொற்றன் என்பது அவன் பெயர்.
பிட்டங் கொற்றனுக்கு இப்பெருமை எப்படி ஆயது? "வாழ்வோர் வாழ வாழ்ந்தவன்”அவன் ஆதலால், புகழின் கொள்கலம் ஆனான்.
உலகில் எவர் இடரின்றி வாழ வேண்டும்?
வாழத்தக்க நல்லோர் அல்லல் எதுவும் இல்லாமல் வாழ வேண்டும். அவர் நல்வாழ்வே உலகின் நல்வாழ்வு. ஆதலல் அவர் நெடிது வாழ்வதற்கு அரண்போல் அமைந்து காக்க வல்லார் கட்டாயம் வேண்டும்.
பிறர்க்கென வாழும் பெருந்தகையர் தம்மைக் காத்துக் கொள்ளத் தாம் எண்ணார். அத்தகையர்க்கு உதவிக் காக்கும் கடப்பாட்டாளர் வேண்டும். அவ்வாறு காப்பவரே வாழ்வோர் வாழ வாழ்பவர் ஆவர். அவ்வாறு வாழ்ந்தவன் பிட்டன் என்றால் அவன் மட்டிலாப் புகழுக்கு இருப்பிடமானவன் தானே!
பிட்டனைப் பாடிய புலவர் பெருமக்களுள் ஒருவர் கண்ணனார். அழகுமிக்க கருநீலக்கண்ணர் அவர். காவிரிப் பூம் பட்டினத்தார். முடியுடைய மூவேந்தர் அன்பையும் ஒரு படியாகப் பெற்ற பெருமையர் அவர் முழுப்பெயர் காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் என்பது.
பிட்டன் பெரும் புகழ் கேட்டு அவனை அண்மினார் கண்ணனார். தாம் கேட்டறிந்த புகழ் அனைத்தும் உண்மையே என்பதை உணர்ந்தார். தமக்கு அள்ளி வழங்கிய வள்ளன்மையில் ஒன்றினார். அவ்வொன்றுதல் தந்நலத்தால் ஆயது அன்று. அவர்க்கு எப்படி வழங்கினானோ அப்படியே பிறர்க்கும் வழங்கி னான் பிட்டன். அதனால் இப் 'பெருந்தகை பிறர்க்கும் அன்னன்’ என்பதை உணர்ந்த பெருமிதத்தில் ஓங்கினார்.
L
“இப்பொழுது தருகிறான். இன்னும் சில நாள் சென்று வரினும் தருவான். அதற்குப் பின்னரும் முன்னே தந்தேன் என்னாமல் பின்னும் தருவான்.