264
இளங்குமரனார் தமிழ்வளம்
―
5
சென்ற பருவத்தில் கனி தந்தேனே என்று இல்லாமல் பருவந்தோறும் தரும் கனிமரம் போலத் தருவான்.
கனிமரத்திற்குக் கூடப் பருவம் என ஒன்று உண்டு. ஆனால், இவன் கொடைக்குப் பருவம் என்பதுதானும் இல்லை. எப் பொழுதும் வேண்டினும் வேண்டுமாறு தருவான்.
இவன் நெடிது வாழ வேண்டும், வாழ்வோர் வாழ இவன் நெடிது வாழ வேண்டும். இவன் எடுக்கும் முயற்சிகள் எல்லாம் வெற்றியாய் முடிய வேண்டும்" - எனப் பலவாறு எண்ணி மகிழ்ந்தார் கண்ணனார்,
66
ய
‘என் தந்தை போல்வானாகிய இவனை நான் வாழ்த்துதல் வேண்டும். எப்படி வாழ்த்துவேன்” எனச் சிந்தித்தார். பிட்டனைப் பற்றிப் பாடியவர் பாடல்கள் அவர் நினைவில் நின்றன.
“கொல்லன் தன் சம்மட்டியை ஓங்கி ஓங்கி அறைகிறானே உலைக்கல் (பட்டடை)! அவ்வுலைக் கல் அசைகின்றதா? சம்மட்டி எப்படித் தாக்கினால் என்ன? இம்மியும் நடுங்காத உலைக்கல் அன்னவன் பிட்டன்” என்ற மருத்துவன் தாமோதரனார் பாடல் நினைவில் வந்தது.
(புறம், 17).
'கோசர் என்பார் படைப்பயிற்சியில் சிறந்தவர். அப் பயிற்சிக்காக அகன்ற பெரிய முண்முருங்கை மரத்தைக் கம்பமாக நட்டு அதனை இலக்காக வைத்து வேலும் அம்பும் ஏவிப் பயிற்சி செய்வர். அக்கருவிகளுக்கு இலக்காகிய மரம் போல், பகைவர் படைக்கலம் தைக்கவும் நிமிர்ந்து நிற்கும் வல்லாளன் பிட்டன்’ என வியந்து போற்றினார்.
'பிட்டன் விழுப்புண் படட்டும்; நேர் தாக்குதலில் நெஞ்ச கத்து இடமில்லையாய்ப் படைகள் துளைப்பினும் துளைக்கட்டும். ஆனால் அவன் உள்ளடியில் முள்ளும் தைக்காமல் இருக் கட்டும்” என்று பெருமூச்சு விட்டார்.
அ ன்
பிறருக்காக வாழ்பவனுக்கு அவன் அறியாமல் மறை முகமாக, ஒரு முள்ளும்கூட - அதுவும் புறத்தடியில் இல்லாமல் உள்ளடியில் கூட - தைத்தல் கூடாது என்னும் கொள்கைச் சிறப்பு என்னே! என்னே!
இக்கொள்கையில் ஊன்றியிருந்தால் முத்த நாதனியமும் கோட்சேயியமும் இன்ன பிற வல்லியங்களும் நாட்டில் தோன்றி