உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 6.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

இளங்குமரனார் தமிழ்வளம் 6

இவ்வாறு விரிவமைந்த ஆசிரியர் தொழில், ஏட்டுக் கல்வி கற்பிப்பாரே ஆசிரியர் என்னும் அளவில் சுருங்கினாலும் வழி காட்டுவாரும் பயிற்சி தருவாரும் ஆசிரியர் என்றே வழங்கும் வழக்கம் இன்றும் மறைந்து விடவில்லை என்பது உண்மை. இவண் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் ஆய்வுத்துறை என்ற வகையில் கற்பிக்கும் கடமை கொண்ட ஆசிரியர்களைப் பற்றிய ஆய்வே இடம் பெறுகின்றது. பல செய்திகள் பல்வகை ஆசிரியர்க்கும் பொருந்துவனவேயாம்.

ஐவகை

ம்

சங்க காலத்திலேயே ஆசிரியர்கள் தாம் கற்பிக்கும் நிலையைப் பொறுத்து ஐவகையராகக் கூறப்பட்டமை சங்கப் புலவர்கள் பெயர்களாலேயே அறிய வருகின்றன. அவர் தொடக்கக் கல்வி முதல் வளர்நிலையில், 1. இளம் பாலாசிரியர், 2. பாலாசிரியர், 3. ஆசிரியர், 4. பேராசிரியர் 5. கணக்காயர் என்பார்.

ஆசிரியர், கற்பித்த நிலையில் இவ்வாறு ஐவகைப் பட்டன ரேனும், கல்வி நிலையில் ஒத்த நிலையர் என்பது இவர்கள் பாடிய பாடல்கள் வேறு பாடறப் பாட்டு தொகை நூல்களில் இடம் பெற்றுள்ள தகவு கொண்டு துணியலாம். குறைந்த வகுப்புக்குக், குறைந்த அளவு கற்ற ஆசிரியர்; வளர்ந்த கல்வி தருதற்கு, வளர்நிலைப் பட்டம் தாங்கி ஆசிரியர் என்று இல்லாமல், கற்பவர் எந்நிலையர் எனினும் கற்பிப்பவர் தகுதி ஒரு பெருநிலைப் பட்டதே என்னும் பழைய நிலைமை இந்நாளிலும் எட்டுதற்கு அரிய புதிய நிலைமையேயாம்! இஃது ஆய்ந்து கொள்ளத் தக்கது ஆகும்.

பெயரீடு இல்லாமை

திருவள்ளுவர், கல்வி, கல்லாமை, அறிவுடைமை என்ப வற்றைப் பற்றிச் சொல்லிய அதிகாரங்களிலும், சொல் வன்மை பற்றிக் கூறிய இடத்தும் அரசின் அங்கமாகிய; உறுப்புகளைக் கூறிய இடங்களிலும், ஆசிரியர் என்றோ, அப்பொருள் சுட்டும் வேறொரு பெயர் கொண்டோ, கூறினார் அல்லர். அமைச்சர் தூதர், ஒற்றர், படைஞர், உழவர், வணிகர் என்றெல்லாம் தொழில் வகையால் குறித்த அவர் கற்பித்தல் தொழில் வகையால் பெயர் குறித்துக் கூறினாரல்லர்.

பார்ப்பான், புலவர் எனப் பெயர்க் குறிப்பு இருப்பினும் கற்பித்தல் கருதிய பெயரீடாக அவை அவ்விடங்களில் (134, 394) அமைந்தில.